தண்ணீர் தேவைக்காக… பாராளுமன்றத்தில் எதிர்கட்சிகள் குரல் கொடுக்க வேண்டும்: ஜிகே வாசன்

GK VASAN - 2026த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக அரசு மாநிலத்தில் நிலவி வரும் தண்ணீர் தட்டுப்பட்டைப் போக்க எடுத்து வரும் நடவடிக்கையை இன்னும் வேகப்படுத்திட வேண்டும். தற்போது நிலவும் தண்ணீர் தட்டுப்பாடு அனைத்து தரப்பு மக்களையும் பாதித்துள்ளது.

கடந்த 50 ஆண்டுகளாக தண்ணீர் தட்டுப்பாடு பிரச்சினை நிலவி வருகிறது. இப்பிரச்சினையைப் போக்க நீண்ட கால திட்டங்களை வகுத்து செயல்படுத்தி தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து கொடுத்திருக்க வேண்டும். கடந்த காலங்களில் ஆட்சி செய்த ஆட்சியாளர்கள் அனைவருக்கும் இப் பொறுப்பு இருந்திருக்கிறது. இச்சூழலில் இப்போதைய அரசு தண்ணீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது என்றாலும் கூட இன்னும் அப்பணிகளை வேகமாகவும் ஆக்கப்பூர்வமாகவும் மேற்கொள்ள வேண்டும்.

chennai water crisis - 2026தற்போது ரெயில் மூலம் தண்ணீர் கொண்டு வரும் முயற்சியை தமிழக அரசு மேற்கொண்டிருப்பதும், ஆலோசனை செய்து பிற வழிகளில் தண்ணீர் கொண்டு வர முயற்சிப்பதும் நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது.தமிழகத்தில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க எதிர்கட்சிகள் நியாயமான முறையில் அரசுக்கு குரல் கொடுக்கலாம். எதிர்கட்சிகள் தண்ணீர் பிரச்சினையை அரசியல் ஆக்காமல் பாராளுமன்றத்தில் குரல் கொடுத்தால் தமிழக மக்களுக்கு நல்லது.

தமிழகத்தில் ஒட்டு மொத்தமாக வெற்றி பெற்றிருக்கின்ற எதிர்கட்சிகள் அனைவரும் ஒரு சேர பாராளுமன்றத்தில் தமிழகத்தின் தண்ணீர் தேவைக்காக குரல் கொடுத்து நிதியை கூடுதலாக ஒதுக்கச் சொல்லி, கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு உரிய தண்ணீரைத் திறந்துவிடவும் வலியுறுத்தலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories