ஒரு கோடியே மூவாயிரம் கோடி ரூபா…! ஸ்டாலினின் தங்கை என நிரூபித்த கனிமொழி!

அடடே... அப்படியா? லைஃப் ஸ்டைல்

kanimoshi karuna - 2026

வாத்தியார் புள்ள மக்கு – என்று பழமொழி கிராமங்களில் சொல்வார்கள். அது அறிவார்ந்த விவகாரங்களில், தந்தையை போல் மகன் இருப்பதில்லை என்பதை காரணம் காட்டி.

சில நேரங்களில், அப்பனுக்குப் புள்ள தப்பாமல் பொறந்திருக்கு என்பார்கள். இது மோசமான செயல்பாடுகள், தவறான அணுகுமுறைகள் இவற்றை மையப் படுத்தி!

தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும் என்று ஒரு சொலவடை உண்டு. இப்படி பல விதங்களில் பழமொழிகள் இருந்தாலும், மக்களைக் குழப்பி திசை திருப்பி, நரித்தனம் செய்யும் நயவஞ்சகராய் இருந்தாலும், தான் எதிர்கொண்ட ஒவ்வொரு சூழ்நிலையையும் அறிவுக் கூர்மையை வெளிப்படுத்தி காரியம் சாதித்துக் கொள்வதில் கெட்டிக் காரராய் இருந்தவர் கருணாநிதி.

அவரது மகன் ஸ்டாலினுக்கோ தமிழே தகராறு. மேடைகளில் அவ்வப்போது நான் கலைஞரின் மகன். வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று பேசமாட்டேன். எதையும் ஆதாரத்தோடுதான் பேசுவேன் என்று சொல்லிச் சொல்லி பழமொழியை தவறாகக் குறிப்பிட்டு மீம்ஸ் நாயகனாகவும் நகைச்சுவைக் கதாபாத்திரமாகவும் பெயர் எடுத்துவிட்டார்.

கருணாநிதியின் மகள் கனிமொழியோ, அண்ணனுக்குத் தங்கை தான் தான் என்று நிரூபிக்கும் விதமாய்ப் பேசியுள்ளார்.  அவருக்கு திருப்பதி உண்டியல் சரியாக கண்ணுக்குத் தெரிகிறது. உண்டியலுக்குள் உள்ள பணம் சரியாகத் தெரிகிறது. அந்தப் பணத்தை எப்படி என்ன செய்ய வேண்டும் என்பதும் சரியாகத் தெரிகிறது. ஆனால், வேதாந்தா, ஸ்டெர்லைட் என்று வரும் போது, எவ்வளவு பணம் சொல்ல வேண்டும், எவ்வளவு சொன்னால் தனக்கு எவ்வளவு கமிஷன் தொகை கிடைக்கும்… சொல்றதோ சொல்றோம்.. ஒரு கோடி ரெண்டு கோடின்னு ரொம்ப சீப்பா சொல்லாமே மூவாயிரம் நாலாயிரம்னு ஒரு குத்துமதிப்பா சொல்லி வைப்போம் என்ற ரீதியில் பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டுக் கொண்டிருக்கிறார்.

இந்தத் தடுமாற்றமும் தப்பும் தவறுமே, கனிமொழியின் பேச்சில் உண்மைத் தன்மை இல்லை என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டது.

அவர் தூத்துக்குடியில் பேசியதன் காணொளி… இது

ஒரு கோடியே மூவாயிரம் கோடி.. செயலுவின் தங்கைதான் என நிருபித்தார்..

1 thought on “ஒரு கோடியே மூவாயிரம் கோடி ரூபா…! ஸ்டாலினின் தங்கை என நிரூபித்த கனிமொழி!”

  1. எப்படியெல்லாம் பொய் சொல்வது ?, பொய் சொல்லியே மற்றவர்களை எப்படி ஏமாற்றுவது ? இவர்கள் சொல்லும் பொய்கள் தங்கள் குடும்பத்தை வளம் பெற செய்ய வேண்டுமென்றே திருட்டு ரயில் ஏறி தி.மு.க. வை ஆட்டைய போட்டு, வளர்ந்த குடும்பத்தில் உண்மை பேசினால் ஆகாது, குடும்பமே அழிந்து போகுமென்று பயம்தான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.