கோவையில் இன்று முதல் கமல்ஹாசன் 3 நாட்கள் சுற்று பயணம்

சற்றுமுன் தமிழகம்

15 May 10 Kamal - 2026கோவையில் இன்று முதல் 3 நாட்களுக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறார்.

நடிகர் கமல்ஹாசன் கடந்த பிப்ரவரி மாதம் அப்துல்கலாம் வீட்டிலிருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். அன்று மதுரையில் நடந்த பொதுக் கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கினார்.

இதன் முதல் பொதுக் கூட்டம் கடந்த சில நாட்களுக்கு முன் திருச்சியில் நடைபெற்றது. இந்த நிலையில் கமல் கோவையில் இன்று முதல் 3 நாட்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்திருந்தார்.

கோவையில் வரும் 13-ம் தேதி பொதுக் கூட்டத்தில் பேசுவதற்கு கமல்ஹாசன் திட்டமிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த திருச்சி பொதுக் கூட்டத்தில் பேசிய கமல் காவிரி விவகாரத்தை முன்வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.