புனித ஜார்ஜியார் ஆலய திருவிழா இன்று தொடங்குகிறது

Published:

St George - 2026நாகர்கோவில் தளவாய்புரம் புனித ஜார்ஜியார் ஆலய திருவிழா இன்று தொடங்கி, 20-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. இன்று காலை 6 மணிக்கு திருப்பலி, மாலை 6 மணிக்கு செபமாலை, 6.30 மணிக்கு கொடிமரம் அர்ச்சிப்பு, கொடியேற்றம், திருப்பலி போன்றவை நடக்கிறது. நிகழ்ச்சியில், கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமை தாங்கி திருப்பலி நிறைவேற்றுகிறார்.

தொடர்ந்து வருகிற திருவிழா நாட்களில் காலை, மாலை நேரங்களில் திருப்பலி, செபமாலை, கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. திருவிழா சிறப்பு நிகழ்ச்சிகளாக வருகிற 17-ந் தேதி காலை 10 மணிக்கு குணமளிக்கும் வழிபாடு நடக்கிறது.

19-ந் தேதி காலை 7 மணிக்கு ஆயர் நசரேன் சூசை தலைமையில் முதல் திருவிருந்து திருப்பலி நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு நற்கருணை ஆசீர் நடக்கிறது. நிகழ்ச்சிக்கு அருட்பணியாளர் பஸ்காலிஸ் தலைமை தாங்குகிறார். அருட்பணியாளர் பிரான்சிஸ் சேவியர் நெல்சன் மறையுரையாற்றுகிறார். இரவு 9 மணிக்கு வாணவேடிக்கை, தேர்ப்பவனி போன்றவை நடைபெறுகிறது.

ALSO READ:  நடத்தையில் சந்தேகம்... நடந்த சண்டை... மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

திருவிழாவின் இறுதி நாளான 20-ந் தேதி காலை 7 மணிக்கு திருவிழா திருப்பலி நடக்கிறது. அருட்பணியாளர் மைக்கல் ஏஞ்சல் தலைமை தாங்குகிறார். அருட்பணியாளர் ஸ்டான்லி சகாய சீலன் மறையுரையாற்றுகிறார். பிற்பகல் 3 மணிக்கு தேர்ப்பவனியும், மாலை 7 மணிக்கு நற்கருணை ஆசீரும் நடைபெறுகிறது.

Related articles

Recent articles

spot_img