அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெறும் என அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.
இதுத்தொடர்பாக அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது. கட்சியின் ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளா் பழனிசாமி தலைமையில் இந்த கூட்டம் நடைபெறும். அ.தி.மு.க எம்.பி-க்களுக்கான கூட்டமும் அன்றைய தினமே நடைபெறுகிறது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் மற்றும் கட்சியின் கட்டமைப்பு குறித்து விரிவாக விவாதிக்கப்படும் என தெரிகிறது.



