கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத்தேர்வெழுதிய அனைத்து மாணவர்களுக்கும் இன்று முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது.
பிளஸ் 2 மாணவர்களுக்கு கடந்த மே 15 -ஆம் தேதி கல்வித் துறை இணையதளத்திலும், மே 17 -ஆம் தேதி அன்று அவரவர் பள்ளியிலும் தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது.
இதுதொடர்பாக தேர்வுத் துறை இயக்குநர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்தியில், கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தேர்வெழுதிய அனைத்து மாணவர்களுக்கும் இன்று காலை 10 மணி முதல் அந்தந்தப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்.
தனித் தேர்வர்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழ்களை தாங்கள் தேர்வு எழுதிய மையத்திலேயே பெற்றுக் கொள்ளலாம்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



