ஸ்ரீவில்லிபுத்தூர்: பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜாவைக் கண்டித்தும் கைது செய்யக் கோரியும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சந்நிதி முன்பு திருக்கோவில் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இது கோயிலுக்கு வந்திருந்த பக்தர்களையும் உள்ளூர் மக்களையும் பெரிதும் கொதிப்படையச் செய்துள்ளது.
ஆலயத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கொடுத்தது யார் என்று பக்தர்கள் கேள்வி எழுப்பினர். நாளை இதே இடத்தில் அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டம் செய்ய்ய அனுமதி கேட்டால் காவல்துறை அனுமதி கொடுக்குமா என்று கேள்வி எழுப்பினார் பக்தர் ஒருவர்.
அண்மையில் ஹிந்து ஆலய மீட்புக் குழு சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், ஹெச்.ராஜா கோயில் அறநிலையத் துறைப் பணியாளர்கள், செயல் அலுவலர்கள் குறித்து விமர்சனம் செய்ததை எதிர்த்து, அறநிலையத் துறைப் பணியாளர்கள் இன்று பல இடங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். சில இடங்களில் ஹெச்.ராஜா படத்தின் மீது மை ஊற்றி தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.




