சமூக வலைதளங்களின் வீரியம்! வைரலான 2 மணி நேரத்தில் கோபுரம் முன் அகற்றப்பட்ட தி.க., விளம்பர போர்டு!

Published:

mayavaram temple 1 - 2026மயிலாடுதுறை: கோயில் வாசலில் வைக்கப் பட்ட தி.க.விளம்பர போர்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு, வைரலான 2 மணி நேரத்தில் உரியவர்களின் கவனத்துக்குக் கொண்டு செல்லப் பட்டு உடனடியாக அகற்றப் பட்டது.

இந்த போஸ்டர் மயிலாடுதுறை படித்துறை விஸ்வநாதர் கோவிலின் வாசலில் முன்பு வைக்கப்பட்டுள்ளது.. மயிலாடுதுறையில் இருக்கும் நண்பர்கள் யாரவது இதை நீக்க முடியுமா?

நாளுக்கு நாள் சொரியான் கூட்டத்தின் அட்டகாசம் எல்லை மீறி கொண்டு இருக்கிறது… இந்து இயக்கங்கள் எல்லாம் ஒன்னு சேர்ந்து இவர்களை சட்டப்படி இவனுகளை ஒடுக்க வேண்டும்.

– என்ற தகவலுடன் இந்த போர்டு குறித்த படம் பேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட சமூகத் தளங்களில் வைரலானது.

mayavaram temple 2 - 2026

இந்நிலையில், தகவல் வெளியாகி அடுத்த 2 மணி நேரத்தில் தகவல் தெரிந்தவுடன் உரிய முறையில் தகுந்தவர்களிடம் பேசி அறிவிப்பு போர்டை நீக்க செய்தனர் மயிலாடுதுறை பகுதி ஹிந்து இயக்கங்களைச் சேர்ந்தவர்கள். இது குறித்த தகவலும் உடனே சமூக வலைத்தளங்களில் பகிரப் பட்டது.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : மணிப்பூர்

முன்னதாக, இரு தினங்களுக்கு முன்னர் சுடுகாட்டு கொட்டகை முன்னர் எடப்பாடியார் அழைக்கிறார் என்று விளம்பர வாசகம் எழுதப் பட்ட படம் சமூக வலைத்தளங்களில் பகிரப் பட்டது. இது பெரும் நகைப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்திய நிலையில் மறுநாளே அந்த வாசகங்கள் சுவரில் கறுப்பு மை இட்டு மறைக்கப் பட்டன.

edappadi govt - 2026

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img