குக்கர் சின்னத்தை தினகரனுக்கு ஒதுக்க இயலாது: உச்ச நீதிமன்றம் கை விரிப்பு!

இந்தியா சற்றுமுன் தமிழகம்

dinakaran cooker - 2026

குக்கர் சின்னத்தை தினகரனுக்கு ஒதுக்க இயலாது என்று உச்சநீதிமன்றம் கை விரித்து விட்டது

முதலில் குக்கர் சின்னத்தை கொடுத்தது யார்? என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கேட்டுள்ளார்.

தில்லி உயர் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து தேர்தல் அதிகாரி குக்கர் சின்னத்தை அளித்தார் என்று டிடிவி தினகரன் சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில்சிபல் வாதிட்டார்.

முன்னதாக குறிப்பிட்ட சின்னத்தை ஒரு கட்சிக்கு வழங்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட முடியுமா  என்று தலைமை நீதிபதி கேட்டார்.

இரட்டை இலை பற்றி மூலவழக்கு நிலுவையில் இருந்தபோது டெல்லி உயர்நீதிமன்றம் குக்கர் சின்னம் ஒதுக்கியது போன்று உச்ச நீதிமன்றமும் இடைக்காலமாக உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் தரப்பு கோரிக்கை விடுத்தது.

இதற்கு பதிவு செய்யப்படாத கட்சிக்கு இடைக்காலமாக குக்கர் சின்னம் வழங்கியது பிரநிதித்துவ சட்டப்படி முரணானது; பதிவு செய்யப்படாத கட்சிக்கு எப்படி பொதுச்சின்னத்தை ஒதுக்க முடியும்? என்று தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.

பதிவு செய்யப்படாத கட்சிக்கு இடைக்காலமாக குக்கர் சின்னம் வழங்கியது பிரநிதித்துவ சட்டப்படி முரணானது. பதிவு செய்யப்படாத கட்சிக்கு எப்படி பொதுச்சின்னத்தை ஒதுக்க முடியும்? என்று தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில் கட்சியாக அமமுகவை பதிவு செய்ய தயார்; ஆனால் இப்போது நேரம் இல்லை என்று டிடிவி தினகரன் தரப்பு கூறியது.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை பதிவு செய்ய தயார். ஆனால் அதற்கு நேரமில்லை. இன்று மாலை 3 மணிக்குள் பதிவு செய்து, அதன் பின் பொதுச்சின்னம் ஒதுக்க முடியுமா ? என்பதை யோசிக்க வேண்டும் என்று கபில் சிபல் விளக்கம் அளித்தார்

அமமுகவை இன்றே பதிவு செய்தால் குக்கர் அல்லது பொது சின்னத்தை உடனே தரமுடியாது என்று – தேர்தல் ஆணையம் கூறியது.

ஒரு கட்சியை பதிவு செய்து 30 நாட்கள் கடந்த பின்னர் தான் பொது சின்னம் கொடுக்க முடியும். தற்போதைக்கு உடனடியாக அமமுகவுக்கு சின்னம் கொடுக்க முடியாது எற்றது தேர்தல் ஆணையம்.

தினகரன் தனிநபர் அல்ல, அவருக்கு 20 எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது, கட்சியை பதிவு செய்ய விண்ணப்பித் துள்ளேன் என்று தினகரன் தரப்பில் வாதம்.

தனியாக கட்சியை பதிவு செய்தால், இரட்டை இலை சின்னத்தை கோருவதற்கான தகுதியை விட்டுக்கொடுக்க நேரிடும் என்றது தினகரன் தரப்பு.

சுயேட்சைக்கான சின்னங்களில் ஒன்றை தினகரன் அணிக்கு 59 தொகுதிகளிலும் ஒரேமாதிரியாக ஒதுக்க முடியுமா ?: தேர்தல் ஆணையத்துக்கு தலைமை நீதிபதி கேள்வி

அதிமுகவின் அணியாக தினகரன் அணி தன்னை நினைத்துக் கொண்டு, வாய்ப்பை தவற விட்டு விட்டது. ஒரு சின்னத்தால் பிரபலமான அவருக்கு, வேறு சின்னம் வழங்குவது அவரது அரசியலுக்கு முடிவுறையாக அமையும்: தலைமை நீதிபதி

தினகரன் அணிக்கு பொது சின்னம் வழங்குவதை ஏற்க முடியாது: எடப்பாடி பழனிச்சாமி & ஓ.பன்னீர்செல்வம் தரப்பு:

இரட்டை இலை சின்னத்தை பெறும் முயற்சியில் இரண்டு முறை டிடிவி தினகரன் தோற்றுவிட்டார். எனவே இவருக்கு இனி இரட்டை இலை கிடையவே கிடையாது: ஓ.பி.எஸ், ஈபிஎஸ் தரப்பு உச்சநீதிமன்றத்தில் வாதம்

ஒரே குழுவில் உள்ளோருக்கு வெவ்வேறு சின்னத்தை வழங்கினால் அவர்களது அரசியல் வாழ்வு கேள்விக்குறி யாகிவிடும். .. என்று கூறினார் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.