
மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்க கோரி செல்போன் கோபுரத்தின் மீது ஏறி இளைஞர் தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள சாமிநாயக்கன்பட்டி பகுதியில் டிரைவரான விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்தியா என்ற மனைவி உள்ளார்.
இந்த தம்பதிகளுக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வேறு ஒரு நபருடன் சந்தியா சென்றதால் விஜயகுமார் மன உளைச்சலில் இருந்துள்ளார்.
இந்நிலையில் அரசு என்ஜினீயரிங் கல்லூரி எதிரில் இருக்கும் செல்போன் கோபுரத்தின் மீது விஜயகுமார் ஏறியுள்ளார். அதன் பின் விஜயகுமார் தனது மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்க கோரி திடீரென தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செல்போன் வீடியோகால் மூலம் விஜயகுமாரை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து விஜயகுமாரின் குழந்தைகளை அழைத்து வந்து பேசி சுமார் 2 1 /2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு விஜயகுமார் அதிலிருந்து இறங்கி வந்துள்ளார்.
அதன்பிறகு காவல்துறையினர் அவரை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று ஆலோசனை கூறி அனுப்பி வைத்துள்ளனர்.



