எம்ஜிஆர்., இல்லாத நிலையில் அவரைப் பற்றி பேசுகிறார் சசிகலா!

Published:

sellur raju in madurai - 2026

மதுரையில் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறார் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே. ராஜூ. உடன் எம்.எஸ். பாண்டியன், வில்லாபுரம் ராஜா, அண்ணாதுரை பாசறை செயலர் அரவிந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

எம்.ஜி.ஆர். இல்லாத நிலையில் அவரைப்பற்றி சசிகலா பேசிக் கொண்டிருக்கிறார். அது அவருடைய தனிப்பட்ட கருத்து. ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் மக்களை சந்திக்கலாம். அவர்களை ஏற்றுக்கொள்வது மக்களுடைய விருப்பம்- என்று, சசிகலா கட்சியினருடன் பேசி வருவது குறித்து செல்லூர் ராஜூ பதில் அளித்துள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது… அதிமுகவின் நிரந்தர பொது செயலாளர் ஜெயலலிதா தான்! அதிமுகவில் பொதுச்செயலாளர் மாற்றம் செய்யப்பட்ட வேண்டும் என்றால் பொதுக்குழு கூடி முடுவு எடுக்கப்படும்.

மதுரையில் அமைச்சர் தன்னுடைய தொகுதியில் மட்டுமே அதிக எண்ணிக்கையில் கொரோனோ தடுப்பூசி முகாம்களை நடத்தி வருகிறார். தடுப்பூசி செலுத்துவதில் தமிழகம் பின்தங்கி உள்ளது. தடுப்பூசி செலுத்துவதில் மக்கள் மதியில் மிகுந்த நம்பிக்கை ஏற்பட்டுள்ளது!

தங்களது ஆட்சியின் போது தடுப்பூசி மீதான நம்பிக்கையை கெடுத்தவர்கள் தற்போதையை ஆளும் கட்சியினர்! முன்னாள் சுகாதார துறை அமைச்சரை குறை கூறுவதை தவிர்த்துவிட்டு முதல்வர் கொடுத்துள்ள அமைச்சர் பணியை செம்மையாக செய்ய வேண்டும்!

ALSO READ:  இருக்கன்குடி மாரியம்மன் கோவில் ஆடி மாத திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

மத்திய அரசை ஒன்றிய அரசு என்று சொல்வதால் மக்கள் மனதில் நிலைத்திருக்க முடியாது! வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்தியவர்களின் விவரங்களை கணக்கெடுப்பு நடத்தி அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும்!

திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.. என்று கூறினார் செல்லூர் ராஜூ.

உணவு துறை அமைச்சர் சிறப்பாக செயல்படுவார், அவர் அனுபவம் வாய்ந்த அமைச்சர்

விரைவில் ரேஷன் கடைகளில் கொரோனோ நிவாரண பொருட்கள் வழங்கும் பணியினை முடிக்க உணவு துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்

Related articles

Recent articles

spot_img