நைனா.. போ நைனா.. போ… தோனியை உற்சாகப் படுத்திய மகள் ஸிவாவின் வைரல் வீடியோ!

பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல் விளையாட்டு

dhony daughter ziva - 2026

தில்லியில் செவ்வாய்க் கிழமை நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் 5-வது லீக் சுற்று ஆட்டத்தில் தில்லி கேபிடல்ஸ் அணியுன் தல தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி மோதியது.

இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த தில்லி அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழந்து 147 ரன் எடுத்தது. அதன் பின்னர் ஆடத் தொடங்கிய சென்னை அணி, 4 விக்கெட்களை இழந்து 150 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தோனியின் ஆட்டத்தை பார்த்து ரசிக்க, ரசிகர்களின் கூட்டத்தோடு கூட்டமாக, தோனியின் மனைவி சாக்‌ஷியும் மகள் ஸிவாவும் வந்திருந்தனர். தோனியை களத்தில் கண்டு உற்சாகம் பொங்க, கத்திக் கொண்டிருந்தார். தனது அப்பாவை உற்சாகப்படுத்த கைகளைக் காட்டி, கோ பப்பா… கோ பப்பா என்று வாய் திறந்து கத்தும் காட்சி அடங்கிய வீடியோ வைரலானது.

இதுதொடர்பான வீடியோவை ஐபிஎல் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்திலும் வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளிலும் தோனியின் மகள் ஸிவாவின் வீடியோக்கள் வைரலானது!

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.