காலையில் கரூர் டூ திருச்சி பேருந்தில் சென்று, திருச்சி விமானநிலையம் மூலம் சென்னை விமானநிலையம் சென்று, அங்கு (சென்னை) தலைமை செயலகம், இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் போர் நினைவுத்தூண் ஆகியவற்றை பார்வையிட்டனர்.
சனிக்கிழமைகளில் அரவணையோடு (சக்கரப்பொங்கல்) சுண்டல் நிவேதனம் செய்து பெருமாளுக்குத் திருமஞ்சனம் செய்தால் சீக்கிரமே திருமணம் நடக்கும் என்றும், தடைப்பட்ட திருமண தோஷம் தானாகவே விலகும் என்றும்
வங்கதேசத்தில் தொடரும் சிறுபான்மை இந்துக்களின் மீதான தாக்குதல். அமைதி வழியில் போராடிய இந்து சன்யாசி கைது. மத்திய அரசு உடனே தலையிட்டு இந்துக்களை பாதுகாக்க வேண்டும்
இதே பகுதியில் அமரன் திரைப்படத்தினை கண்டித்து அனுமதி இன்றி போராட்டம் நடத்திய இஸ்லாமியர்களை கைது செய்யாத காவல்துறை, பெட்ரோல் குண்டு வீசி 8 மணி நேரம் ஆகியும்
காலையில் கரூர் டூ திருச்சி பேருந்தில் சென்று, திருச்சி விமானநிலையம் மூலம் சென்னை விமானநிலையம் சென்று, அங்கு (சென்னை) தலைமை செயலகம், இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் போர் நினைவுத்தூண் ஆகியவற்றை பார்வையிட்டனர்.
சனிக்கிழமைகளில் அரவணையோடு (சக்கரப்பொங்கல்) சுண்டல் நிவேதனம் செய்து பெருமாளுக்குத் திருமஞ்சனம் செய்தால் சீக்கிரமே திருமணம் நடக்கும் என்றும், தடைப்பட்ட திருமண தோஷம் தானாகவே விலகும் என்றும்
வங்கதேசத்தில் தொடரும் சிறுபான்மை இந்துக்களின் மீதான தாக்குதல். அமைதி வழியில் போராடிய இந்து சன்யாசி கைது. மத்திய அரசு உடனே தலையிட்டு இந்துக்களை பாதுகாக்க வேண்டும்
இதே பகுதியில் அமரன் திரைப்படத்தினை கண்டித்து அனுமதி இன்றி போராட்டம் நடத்திய இஸ்லாமியர்களை கைது செய்யாத காவல்துறை, பெட்ரோல் குண்டு வீசி 8 மணி நேரம் ஆகியும்
ஐ.பி.எல் 2023 தொடரின் மூன்றாம் நாளான நேற்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் ஆட்டம் ஹைதராபாத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் இடையே நடந்தது. இரண்டாவது ஆட்டம் பெங்களூருவில் மும்பை இண்டியன்ஸ் அணிக்கும் ராயல் கேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கும் இடையே நடந்தது.
ஹைதராபாத் vs ராஜஸ்தான்
ராஜஸ்தான் அணி (203/5, ஜெய்ஸ்வால் 54, பட்லர் 54, சஞ்சு சாம்சன் 55, ஹெட்மெயர் 22, ஃபரூக்கி 2/41, நடராஜன் 2/23) ஹைதராபாத் அணியை (131/8, அப்துல் சமது 32, மாயங்க் அகர்வால் 27, சாஹல் 4/17, போல்ட் 2/21, அஷ்வின் மற்றும் ஹோல்டர் தலா 1 விக்கட்) 72 ரன் கள் வித்தியாசத்தில் வென்றது.
டாஸ் வென்ற ஹைதராபாத் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய ராஜஸ்தான் 20 ஓவர்களில் அதிரடியாக விளையாடி 203/5 ரன்கள் குவித்து மிரட்டியது. அந்த அணிக்கு ஆரம்பத்திலேயே சரவெடியாக பேட்டிங் செய்து, பவர்ப்ளே ஓவர்களான முதல் 6 ஓவரில் 85 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த ஜோஸ் பட்லர் – யசஸ்வி ஜெய்ஸ்வால் ஜோடி ஐபிஎல் வரலாற்றில் பவர் பிளே ஓவர்களில் ராஜஸ்தானின் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்ய உதவினர். அந்த ஜோடியில் வெறித்தனமாக பேட்டிங் செய்த ஜோஸ் பட்லர் 7 பவுண்டரி 3 சிக்சருடன் 54 (37 பந்துகள்) ரன்களில் ஆட்டமிழக்க தனது பங்கிற்கு சிறப்பாக செயல்பட்ட யசஎஸ்வி ஜெய்ஸ்வால் 9 பவுண்டரியுடன் 54 (37 பந்துகள்) ரன்கள் குவித்து அவுட்டானார். அடுத்து வந்த தேவதூத் படிக்கல் 2, ரியான் பராக் 7 என முக்கிய பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டானாலும் மறுபுறம் பொறுப்புடனும் அதிரடியாகவும் செயல்பட்ட கேப்டன் சஞ்சய் சாம்சன் 3 பவுண்டரி 4 சிக்ஸருடன் 55 (32 பந்துகள்) ரன்கள் குவித்து கடைசி நேரத்தில் ஆட்டமிழந்தார். இறுதியில் சிம்ரோன் ஹெட்மயர் 22* (16 பந்துகள்) ரன்கள் அடித்து சூப்பர் பினிஷிங் கொடுத்தார். ஹைதராபாத் சார்பில் அதிகபட்சமாக பரூக்கி மற்றும் நடராஜன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைச் சாய்த்தனர்.
அதை தொடர்ந்து 204 என்ற கடினமான இலக்கை துரத்திய ஹைதராபாத்துக்கு ட்ரெண்ட் போல்ட் வீசிய முதல் ஓவரிலேயே அபிஷேக் சர்மா மற்றும் ராகுல் திரிபாத்தி ஆகியோர் டக் அவுட்டாகி பெரிய பின்னடைவை கொடுத்தனர். அதனால் ஏற்பட்ட சரிவை சரி செய்வதற்காக மெதுவாக விளையாடிய ஹரி ப்ரூக் 13 (21 பந்துகள்) ரன்களில் அவுட்டாகி செல்ல அடுத்து வந்த வாஷிங்டன் சுந்தர் 1, கிளன் பிலிப்ஸ் 8 என முக்கிய வீரர்களும் ராஜஸ்தானின் தரமான பந்து வீச்சில் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாக்கி பின்னடைவை கொடுத்தனர். மறுபுறம் நங்கூரமாக விளையாட முயன்ற மயங் அகர்வாலும் 27 (23 பந்துகள்) ரன்களில் அவுட்டானதால் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் ஹைதராபாத் 131/7 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்தளவுக்கு பந்து வீச்சில் ஆரம்பம் முதலே துல்லியமாக செயல்பட்டு 72 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வென்றது.
மும்பை vs பெங்களூரு
புகழ்பெற்ற சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் அந்தப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனைத் தொடர்ந்து களமிறங்கிய மும்பைக்கு இசான் கிசான் 10 (13 பந்துகள்) ரன்னில் அவுட்டாகி ஏமாற்ற, அடுத்து வந்த கேமரூன் கிரீன் 5 (4 பந்துகள்) ரன்களில் அவுட்டாகி பின்னடைவை கொடுத்தார். அதை விட மறுபுறம் ரொம்பவே தடுமாறிய கேப்டன் ரோகித் சர்மா 1 (10 பந்துகள்) ரன்னில் அவுட்டாநார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நம்பிக்கை நட்சத்திரம் சூரியகுமார் யாதவ் 15 (16 பந்துகள்) ரன்களில் நடையைக் கட்டினார். அதனால் 48/4 என்ற மோசமான தொடக்கத்தை பெற்று திண்டாடிய மும்பையை அடுத்து ஜோடி சேர்ந்த திலக் வர்மா – நேஹல் வாதேரே ஆகியோர் அழுத்தத்திற்கு அஞ்சாமல் அதிரடியாக செயல்பட்டு 5வது விக்கெட்டுக்கு 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஓரளவு காப்பாற்றினர்.
அதில் வாதேரே 1 பவுண்டரி 2 சிக்சருடன் 21 (13 பந்துகள்) ரன்களில் அவுட்டாக அடுத்து வந்த டிம் டேவிட் 4 (7 பந்துகள்), ரித்திக் ஷாக்கீன் 5 (3 பந்துகள்) என முக்கிய பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி மீண்டும் ஏமாற்றத்தை கொடுத்தனர். ஆனாலும் மறுபுறம் நங்கூரமாக, நேரம் செல்ல அதிரடியாகச் செயல்பட்ட திலக் வர்மா பெங்களூருவுக்கு சிம்ம சொப்பனமாக மாறி தனி ஒருவனாக 9 பவுண்டரி 4 சிக்சருடன் 84* (46 பந்துகள்) ரன்கள் விளாசி அபார பினிஷிங் கொடுத்தார். ஒரு கட்டத்தில் 100 ரன்களை தாண்டுமா என்று கருதப்பட்ட மும்பை 20 ஓவர்களில் 171/7 ரன்கள் எடுத்தது.
அதைத்தொடர்ந்து 172 என்ற இலக்கை துரத்திய பெங்களூருவுக்கு நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி மற்றும் கேப்டன் டு பிளேஸிஸ் ஆகியோர் முதல் ஓவரிலிருந்தே அதிரடியை துவக்கி விரைவாக ரன்களை சேர்த்தனர். படுவேகத்தில் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து தொல்லை கொடுத்த இந்த ஜோடி கேப்டன் ரோகித் சர்மா போட்ட அத்தனை திட்டங்களையும் தவிடு பொடியாக்கி அரை சதம் கடந்து மிரட்டியது. நேரம் செல்ல செல்ல அபாரமாக விளையாடி 148 ரன்கள் மெகா ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்த ஜோடி ஐபிஎல் வரலாற்றில் மும்பைக்கு எதிராக அதிக ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் ரன்கள் குவித்த பெங்களூரு ஜோடியாக சாதனை படைத்து போது 5 பவுண்டரி 6 சிக்சடன் டு பிளேஸிஸ் 73 (43) ரன்கள் குவித்து வெற்றியை உறுதி செய்து அவுட்டானார்.
அடுத்து வந்த தினேஷ் கார்த்திக் டக் அவுட்டானாலும் கடைசி வரை அவுட்டாகாமல் சிம்ம சொப்பனமாக விளையாடிய விராட் கோலி 6 பவுண்டரி 5 சிக்ஸருடன் 82* (49 பந்துகள்) ரன்களும் கடைசி நேரத்தில் 2 சிக்சருடன் 12* (3 பந்துகள்) ரன்களும் எடுத்த கிளன் மேக்ஸ்வெல் சூப்பர் பினிஷிங் கொடுத்ததால் 16.2 ஓவரிலேயே 172/2 ரன்கள் எடுத்த பெங்களூரு 8 விக்கெட் வித்தியாசத்தில் அதிரடி வெற்றி பெற்றது.