“ஸ்ரீவதி ஸ்டோர்ஸ்” என்று பெயர் வைத்திருப்பார்கள் அதானே”

மகா பெரியவர் மகிமை

“ஸ்ரீவதி ஸ்டோர்ஸ்” என்று பெயர் வைத்திருப்பார்கள் அதானே”17eb84b3af187198933edebabedbcf5f radio stations guru - 2026

. 12-09-2013 கிருஷ்ணகான சபாவில் காஞ்சி மகான் சந்திரசேகரேந்திர ஸ்வாமிகளின் மகிமை” பி.சுவாமிநாதனின் சி.டி.வெளியீட்டு விழாவில் திரு சுகி சிவம் சொன்ன ஒரு மகிமை.

மயிலாப்பூரில் உள்ள சம்ஸ்கிருத கல்லூரியில் முகாமிட்டிருந்தபோது, வீதி வலம் ஒரு நாள் வந்தார்.

தெருவில் ஒரு கடையின் பெயர்ப் பலகையில் “ஸ்ரீவதி ஸ்டோர்ஸ்” என்பதைப் பார்த்ததும் அவருக்கு ஒரு சந்தேகம் எழுந்தது. அந்த
சந்தேகத்தை உடனடி தீர்த்துக் கொள்வதற்காக தன்னுடைய சிஷ்யர் ஒருவரை அனுப்பி பெயர்க் காரணத்தை அறிந்து வரச் சொன்னார்.

அந்த சிஷ்யர் வருவதற்குள் இவரே சரியான காரணத்தை கண்டுபிடித்து விட்டார்.சிஷ்யன் பதில் சொல்ல முயல்வதற்கு முன்;

பெரியவர்; ” அந்தக் கடையின் உரிமையாளர் பெயர் ‘ஸ்ரீனிவாசன்’ அவரது துணைவியாரின் பெயர் ‘பத்மாவதி’ என்றிருக்கும்.இரண்டு பெயரையும் இணைத்து “ஸ்ரீவதி ஸ்டோர்ஸ்” என்று பெயர் வைத்திருப்பார்கள் அதானே” என்றார்.

சிஷ்யன் வாயைப் பிளந்தான்!

ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.