தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனராக இருந்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் வயது மூப்பின் காரணமாக காலமானார். 91 வயதாகும் சிலம்பொலி செல்லப்பன் வயது மூப்பினால் இன்று காலை சென்னையில் காலமானார். சிலம்பொலி செல்லப்பன் சிலம்பொலி, பெருங்கதை ஆராய்ச்சி, சங்க இலக்கிய தேன் உள்ளிட்ட பல்வேறு நூல்களை எழுதியவர் ஆவார்.
சிலம்பொலி செல்லப்பன் நாமக்கல் மாவட்டம் சிவியாம் பாளையம் எனும் ஊரில் பிறந்த இவர் கணித ஆசிரியராகப் பணியைத் தொடங்கியவர். சிறந்த பேச்சாளர். உலகத் தமிழ் மாநாட்டு உதவி அலுவலர், தமிழ் வளர்ச்சி இயக்குநர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் என பல பணிகளையாற்றியவர். சிலம்பொலி, பெருங்கதை ஆராய்ச்சி, சங்க இலக்கியத் தேன் முதலிய பல நூல்களை எழுதியிருக்கிறார். தமிழக அரசின் பாவேந்தர் பாரதிதாசன் விருது பெற்றிருக்கும் இவர் எழுதிய “சிலம்பொலியாரின் அணிந்துரைகள்” எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 2006 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் திறனாய்வு எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.




