ஹைதராபாத்தில் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரி வெடிப்பது போன்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வாகன ஓட்டிகளின் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் பெட்ரோல் வாகனங்கள் அதிகரித்து வருவதால் காற்று மாசு ஏற்பட்டு வருகிறது. இதனால் இயற்கை மற்றும் மனித வளங்களுக்கு மிக பெரிய பாதிப்பு ஏற்படுகிறது. இதன் காரணமாக பெரும்பாலான மக்கள் தற்பொழுது எலக்ட்ரிக் பைக்குகளை நோக்கி பயணம் செய்ய ஆரம்பித்துள்ளனர்.
மத்திய அரசும் FAME II திட்டத்தின் கீழ் எலக்ட்ரிக் பைக்க்குகளை ஊக்குவிப்பதற்கான நடைமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் அனைத்து முன்னணி இருசக்கர வாகன நிறுவனங்களும் எலக்ட்ரிக் பைக்குகளை அறிமுகம் செய்து விட்டன.
மக்கள் இதனை ஆர்வமாக வாங்க தொடங்கிய இந்த சமயத்தில், ஹைதராபாத்தில் இருந்து தற்பொழுது அதிர்ச்சிகரமான வீடியோ ஒன்று ட்விட்டரில் வெளியிடப்பட்டுள்ளது.
அந்த வீடியோவில் ஆண் ஒருவர் தனது வாகனத்தில் பயணம் செய்து கொண்டிருக்கும் பொழுது திடீரென வாகனத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து என்ன என்று வாகனத்தின் பின் புறத்தை திறந்து பார்த்த பொழுது பேட்டரி வெடிக்க ஆரம்பித்துள்ளது.
இதனால் அந்த இடமே புகை மூட்டம் 1 நிமிடத்திற்கும் மேலாக இருந்ததால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது. இந்த சம்பவம் தற்பொழுது, எலக்ட்ரிக் வாகனம் பயன்படுத்துபவர்கள் மத்தியில் வாகனத்தின் பாதுகாப்பு குறித்து கேள்வியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் வாகனத்தின் பேட்டரி வெடித்ததற்கான காரணம் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.
Buy a E Scooter and suffer pic.twitter.com/OGX6CxMmMb
— Patrao (@in_patrao) September 29, 2021