மோடியின் செயல்திறனில் முழு திருப்தி..! கருத்துக் கணிப்பில் வெளிப்பட்ட மக்கள் நம்பிக்கை!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்

modi superb - 2026

இது சர்வேக்களின் காலம். சர்வே முடிவுகள் தேர்தல் வாக்களிப்பில் பாதகத்தை அல்லது சாதகத்தை ஏற்படுத்துமா என்றால் அது கேள்விக் குறிதான். இருப்பினும், மக்கள் கருத்து என்று பல்வேறு அமைப்பினரும் கருத்துக் கணிப்புகளை நடத்தி வருகின்றனர்.

கடந்த மார்ச் மாதம் 2-ஆம்தேதி முதல் 22 ஆம் தேதி வரை சுமார் 20 நாட்களுக்கு நாடு முழுவதும் நேஷனல் டிரஸ்ட் என்ற அமைப்பு ஒரு கருத்து கணிப்பு நடத்தியது.

இதில் சுமார் 31 ஆயிரம் பேர் பங்கேற்று தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர். அந்த முடிவுகளின் படி, பிரதமர் நரேந்திர மோடிக்கு நாடு முழுவதும் செல்வாக்கு அதிகரித்துள்ளது. மோடியே வலுவான, சிறந்த தலைவர் என்கின்றனர் பெரும்பாலானவர்கள்.

தற்போதைய பிரதமர் மோடியின் செயல்திறன் மதிப்பீடு குறித்து மக்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு பலரும் தங்களுக்கு மோடியின் செயல்திறன் முழு திருப்தி அளிப்பதாகக் கூறியுள்ளனர்.

மோடியின் செயல்திறன் நன்று என 45.4 % பேரும்,
பிரமாதம் என 21.7 சதவீதம் பேரும்,
சராசரி என 19.3 சதவீதம் பேரும்
சுமார் என 3.9 சதவீதம் பேரும்,
மோசம் என 9.6 சதவீதம் பேரும்
– கூறியுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.