‘அந்த தெர்மக்கோல் ரகசியம்’ ; வெளிப்படுத்திய செல்லூர் ராஜு..!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் தமிழகம் மதுரை லைஃப் ஸ்டைல்

Sellur Raju - 2026

துரைமுருகன் கூறும் பதில் முறையற்றது என்று கூறியுள்ள அமைச்சர் செல்லூர் ராஜூ, ‘அந்த’ தெர்மக்கோல் ரகசியத்தை மெதுவாக வெளிப்படுத்தியுள்ளார்!

மதுரை அதிமுக. வேட்பாளர் ராஜ்சத்யனை ஆதரித்து மதுரை ரேஸ்கோர்ஸ் மைதான வளாகத்தில் வாக்கு சேகரித்தார் அமைச்சர் செல்லூர் ராஜூ.

அப்போது நடிகர் நடிகைகளின் பிரசாரத்துக்குக் கூட்டம் கூடுவது குறித்து நக்கல் அடித்த செல்லூர் ராஜூ, மதுரையில் எருமை மாட்டை குளிப்பாட்டினால் கூட மக்கள் கூடி நின்று வேடிக்கை பார்ப்பார்கள் என்று கிண்டலடித்தார்.

தெர்மக்கோல் விவகாரத்தில் பொறியாளர் செய்த தவறால்தான் அந்த விவகாரம் தோல்வியில் முடிந்து, தனது பெயரையும் தெர்மக்கோல் ராஜூ என கேலி செய்து, சமூக வலைத்தளங்கள் பரவ செய்தன என்று வருத்தத்துடன் கூறினார் செல்லூர் ராஜூ.

திமுக பொருளாளர் துரைமுருகன் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு, கோடிக்கணக்கில் பணம் கைப்பற்றியது குறித்து கருத்து தெரிவித்த துரைமுருகன், அந்த பணம், யாரோ கொண்டு வந்து வைத்துச் சென்றது என கூறுவது முறையற்ற பதில் என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.