வருமான வரித்துறை வரப் போறாங்களாம்! வரவேற்கக் காத்திருக்கிறேன்: ப.சிதம்பரம்!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை லைஃப் ஸ்டைல்

chidambaram - 2026

தனது வீட்டில் சோதனை நடத்த திட்டமிட்டிருக்கும் வருமான வரித்துறை அதிகாரிகளை வரவேற்கக் காத்திருப்பதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பதிவிட்டுள்ள டுவீட்டர் பதிவில்,

எனக்குக் கிடைத்த தகவல்: என்னுடைய சென்னை மற்றும் மானகிரி வீடுகளில் வருமான வரி இலாகாவின் சோதனை எந்த நேரத்திலும் நடக்கலாம். வருமான வரி அதிகாரிகளை நாங்கள் வரவேற்க காத்திருக்கிறோம். எங்கள் தேர்தல் பணிகளை முடக்கவே இந்த நடவடிக்கை என்பது எல்லோருக்கும் தெரிந்த செய்திதான். இந்த அரசின் அத்து மீறல்களை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தேர்தல் நாளன்று சரியான பாடம் புகட்டுவார்கள் – என குறிப்பிட்டுள்ளார்.

சிதம்பரத்தின் டிவீட்”

தொடர்ந்து இன்று காலை அவர் வெளியிட்டுள்ள ஆங்கிலத்தில் அமைந்த ட்விட்டர் பதிவுகளில், பிரதமரின் ஒவ்வொரு பிரசார கூட்டத்திற்கும் எத்தனை கோடிகள் செலவிடப்படுகிறது என பிரதமரின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் கேட்கிறார்கள்.

ஒவ்வொரு பிரசாரக் கூட்டத்திற்கும், பணக்கார குடும்பத்தின் திருமண விழாவில் செய்யப்படுவதை விட பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்படுகிறது. ஏராளமான எல்இடி திரைகள் அமைக்கப்படுகிறது. இதற்கெல்லாம் பணம் எங்கிருந்து வருகிறது?

பிரதமரின் ஒவ்வொரு கூட்டத்திற்கும் செய்யப்படும் செலவு, வேட்பாளரின் தேர்தல் செலவு கணக்கில் சேர்க்கப்படும் அல்லது வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்பவரின் கணக்கில் சேர்க்கப்படுமா? – என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.