8 வழிச்சாலை வழக்கின் தீர்ப்பு தேர்தலில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை – சேலம் இடையே 8 வழி பசுமைச்சாலை திட்டத்துக்கு எதிரான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த திட்டத்திற்கான அரசாணையை ரத்து செய்து தீர்ப்பு வழங்கி உள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர் அதற்கு பதிலளித்த அவர் 8 வழிச்சாலை வழக்கின் தீர்ப்பு தேர்தலில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றார்.
சென்னை மற்றும் சிவகங்கையில் உள்ள தனது வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தவுள்ள தகவல் தனக்கு தெரிய வந்துள்ளதாக ப.சிதம்பரம் கூறி இருந்தார். சோதனை நடத்த அதிகாரிகளை வரவேற்க தயாராக உள்ளதாகவும் அவர் ட்விட்டரில் தெரிவித்து இருந்தார்.
இதுகுறித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், எல்லாவற்றையும் துடைத்து வைத்துவிட்டு வாங்க, வாங்க என்று சிதம்பரம் கூறுவதாக ஜெயக்குமார் நகைச்சுவையாக விமர்சித்தார்.