பாஜக., தேர்தல் அறிக்கை; சங்கல்ப பத்ர – உறுதிமொழிப் பத்திரம் வெளியானது! 48 பக்கம்; 75 வாக்குறுதிகள்!

Published:

election bjp manifesto - 2026

புதுதில்லி: பாஜக.,வின் தேர்தல் அறிக்கை சங்கல்ப பத்ர – உறுதிமொழிப் பத்திரம் என்ற பெயரில் வெளியானது.

தேர்தல் அறிக்கையை தில்லியில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதிஅமைச்சர் அருண் ஜேட்லி, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், பாஜக., தேசியத் தலைவர் அமித்ஷா உள்ளிட்டோர் வெளியிட்டனர்.

தேர்தல் அறிக்கையை வெளியிட்டுப் பேசிய பாஜக.,தலைவர் அமித்ஷா, பாஜக.,வின் தேர்தல் அறிக்கைக்கு பெயர் சங்கல்ப பத்ரா. அதாவது உறுதிமொழிப் பத்திரம். பாஜக.,வின் 5 ஆண்டு ஆட்சியில் சாதனைகள் பல படைக்கப்பட்டுள்ளன.

விவசாயிகளுக்காக பணியாற்றியுள்ளோம். 2014-19 காலக் கட்டம் இந்தியாவின் சரித்திரத்தில் பொற்காலம். பாஜக., ஆட்சியில், இந்திய பொருளாதாரம் வளர்ச்சி பெற்றுள்ளது. தேசப் பாதுகாப்பை உறுதி செய்துள்ளோம். 50 கோடி ஏழைகளுக்காக உழைத்துள்ளோம் .

வெளிப்படையான அரசுக்கு மோடி அரசு ஓர் உதாரணம். 5 ஆண்டு கால ஆட்சியில் ஊழல் ஏதும் இல்லை. பிரதமர் மோடி ஆட்சியின் கீழ் ஏழைகளுக்கு பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

ALSO READ:  இருக்கன்குடி மாரியம்மன் கோவில் ஆடி மாத திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

5 ஆண்டில் மிகப்பெரிய முடிவுகளை எடுத்துள்ளோம். இளைஞர்கள் விருப்பத்துக்கு ஏற்ப பணியாற்றி இருக்கிறோம். தேர்தல் அறிக்கைக்காக 6 கோடி பேரிடம் ஆலோசனை கேட்டுள்ளோம்… என்று கூறினார்.

நாடாளுமன்ற தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கை – சங்கல்ப பத்திரத்தில்…

பாஜக தேர்தல் அறிக்கை தொலைநோக்கு பார்வை கொண்டது,

நடைமுறைக்கு சாத்தியமானது

பாஜக தேர்தல் அறிக்கையில் 75 வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன

பாஜக தேர்தல் அறிக்கையில் 12 துணைத் தலைப்புகளில் வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன

வேளாண்மை, ஊரக வளர்ச்சி சார்ந்து 25 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகளுக்கு பாஜக தேர்தல் அறிக்கையில் உறுதி கூறப் பட்டுள்ளன.

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும், அரசமைப்புச் சட்டத்தின் 370ஆவது பிரிவு ரத்து செய்யப்படும்

உள்கட்டமைப்புத் துறையில் 100 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டுக்கு உறுதி

பயங்கரவாதத்திற்கு எதிராக, துளிகூட சமரசம் இல்லை என்ற கொள்கை தொடர்ந்து பின்பற்றப்படும்

ராணுவத்திற்கு தேவையான அதிநவீன கருவிகள், தளவாடங்கள் வாங்குவது விரைவு படுத்தப்படும்!

பாஜக தேர்தல் அறிக்கையின் சிறப்பு அம்சங்கள்

ALSO READ:  முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

▪அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும்
▪பொருளாதாரத்தை உயர்த்த உறுதி
▪கல்வி சுகாதாரம் அனைவருக்கும் வழங்க திட்டங்கள்
▪தீவிரவாதத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும்
▪விவசாயிகள் வணிகர்களுக்கு ஓய்வூதியம்

ஜிஎஸ்டி நடைமுறை மேலும் எளிமையாக்கப்படும்

யோகாவை உலக அளவில் கொண்டுசெல்ல மேலும் நடவடிக்கை எடுக்கப்படும்

நாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் நீளம் 2022-க்குள் இரட்டிப்பாக்கப்படும்

60 வயதான சிறு, குறு விவசாயிகளுக்கு ஒய்வூதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும்

சபரிமலை விவகாரத்தில் மத நம்பிக்கைகள், சடங்குகளை உச்சநீதிமன்றம் முன் எடுத்துரைத்து, அவற்றை பாதுகாப்போம்

தீவிரவாதம் வேரோடு அழிக்கப்படும்வரை, தீவிரவாதத்திற்கு எதிரான கடுமையான நடவடிக்கைகள் தொடரும்

வட்டி இல்லாமல் ரூ.1 லட்சம் வரை குறுகிய கால விவசாய கடன்

கட்டமைப்பை மேம்படுத்த ரூ.100 லட்சம் கோடி, விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடனுக்கு வட்டி இருக்காது

  • உள்ளிட்ட 75 வாக்குறுதிகள் இந்த 48 பக்கங்கள் கொண்ட பாஜக சங்கல்ப பத்திரத்தில் இடம்பெற்றுள்ளன.
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img