தன் மீதான குற்றச்சாட்டை தானே நிரூபித்த ப.சிதம்பரம்!

Published:

chidambaram karthi nalini - 2026

தமிழகத்தின் மிகப் பெரும் பண முதலை, முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் என்பது பலரும் முன்வைக்கும் குற்றச்சாட்டு.

மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி செய்த திமுக.,வினர் உள்ளூரில் மக்களின் சொத்துக்களை அடித்துப் பிடுக்கி, கொள்ளை அடித்து, கல்விக் கொள்ளை, கட்டணக் கொள்ளை அடித்து சொத்து சேர்த்தார்கள் என்றால், ப.சிதம்பரம் குடும்பமோ, வெளிநாடுகளில் கணக்கிலடங்காத சொத்துகளை சேர்த்து வைத்திருக்கிறார் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

நாட்டின் நீதித்துறையைக் கையில் போட்டுக் கொண்டு, தானும் தன் மனைவியும் சேர்ந்து, அரசுத் தரப்பு போடும் வழக்குகளை எல்லாம் எதிர்கொள்ள முன் ஜாமீனும் ஜாமீனும் வாங்கி,  தன்னை கைது செய்யக் கூடாது என்ற உத்தரவை வாங்கிக் கொள்ளும் அளவுக்கு நீதிமன்றங்களையே வளைக்கும் செல்வாக்கு மிகுந்தவர் என்று குற்றம் சாட்டுகிறார்கள், வெறுத்துப் போன பொதுமக்கள்!

நிதி அமைச்சகம், வருமான வரித் துறை, சிபிஐ., உள்ளிட்ட முக்கியத் துறைகளில், காங்கிரஸின் உளவுப் பிரிவினரும், ஆதரவாகச் செயல்படும் அதிகாரிகளும், கூட்டுக் கொள்ளைக்குத் துணை போகும் கறுப்பு ஆடுகளும் சிதம்பரத்துக்கு உண்டு என்று கூறப்படுகிறது.

ALSO READ:  இடதுசாரிகளின் இரட்டை வேடம்: தியானமென் சதுக்கமும் ஜன்தர்மந்தரும்!

இதை விட, மத்தியில் ஆளும் பாஜக.,வின் தற்போதைய நிதி அமைச்சர் அருண் ஜேட்லியே கூட ப.சிதம்பரத்துக்கு மிகவும் நெருக்கமானவர் என்றும், அவர் மூலம் பல்வேறு வகைகளில் அவர் தப்பித்து வருகிறார் என்றும் குற்றம் சாட்டப்படு வருகிறது.

இந்தக் குற்றச்சாட்டுகள் எல்லாமே உண்மைதான் என்று கூறும் வகையில் ப.சிதம்பரம் இன்று சில டிவீட்களை செய்துள்ளார்.

அதில்,   ‘என் வீட்டில் ரெய்டு நடத்த போகிறார்கள் என்று எனக்கு தெரிய வருகிறது’..என்று கூறியிருக்கிறார் ப,சிதம்பரம்.

எங்கு ரெய்டு – சோதனை நடத்தப் போகிறோம் என்பது சோதனைக்குச் செல்லும்  அதிகாரிகளுக்கே கடைசி நிமிடத்தில் தான் தெரிய வரும். அப்படி இருக்க… ப.சிதம்பரத்திற்கு மட்டும் எப்படி  முன்கூட்டியே தெரிந்தது? என்ற கேள்வியை எழுப்புகிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

அதை பெருமையாக வேறு ட்வீட் செய்திருக்கிறார் ‘காங்கிரஸ் கட்சியின்’ பொருளாதார மேதையும் முன்னாள் இந்திய நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் என்று சிரிக்கிறார்கள் சமூக வலைத்தளங்களில்! அப்படியானால் அவருக்கு உளவு தகவல் சொன்னது யார்? வருமான வரித்துறையில் இருக்கும் கருப்பு ஆடு எது? ப.சிதம்பரம் அந்தக் கருப்பு ஆடுக்கு எவ்வளவு பணம் கொடுத்து வேலைக்கு வைத்திருக்கிறார் என்றெல்லாம் கேள்வி கேட்கிறார்கள்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர உத்ஸவ நான்காம் நாளில்..!

காங்கிரஸ் -தி.மு.க. கூட்டணியான ஐ.மு.கூ.,யின் 10 வருட ஆட்சியில்..இந்தியா சந்தித்த பெரும் அவலங்களும், சீர்கேடுகளும் , ஏழை எளிய, நடுத்தர மக்களின் வரிப் பணத்தை சுரண்டி தின்ற இமாலய ஊழல்களும் பின்னணியில் இருந்த அதிகார துஷ்பிரயோகங்களும் … ஏன் நடந்தன என்பதற்கான உதாரணம் ப.சிதம்பரத்தின் இன்றைய டிவீட்கள்  என்று கூறுகிறார் அரசியர் விமர்சகர் பானு கோம்ஸ்.

எப்படியோ.. ப.சிதம்பரம் தன்னைத் தானே காட்டிக் கொடுத்துக் கொண்டுவிட்டார் தமிழக மக்களிடம்! இத்தகைய புத்திசாலியை தமிழகம் பெற்றிருப்பது, தமிழகம் செய்த தவப்பயன் அல்லாமல் வேறு என்ன?!

Related articles

Recent articles

spot_img