தண்ணி அடித்து பணத்தை செலவு செய்து விட்டு… பறக்கும் படைமீது பழிபோட்டவர் கைது!

உள்ளூர் செய்திகள் கிரைம் நியூஸ் சற்றுமுன் திருச்சி

21 May28 TASMAC - 2026

தண்ணி அடித்தே பணத்தை செலவழித்துவிட்டு பறக்கும் படையினர் மீது பழி போட்டு நாடகமாடியவர் கைது செய்யப் பட்டார்.

பரமத்திவேலூரில் அண்ண‌னிடம் கொடுக்க வேண்டிய பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறித்துச் சென்று விட்டதாக கூறி நாடகம் ஆடிய தம்பியை போலீசார் கைது செய்தனர்.

பரமத்தி வேலூரில் அண்ண‌னிடம் கொடுக்க வேண்டிய பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறித்து சென்று விட்டதாக கூறி நாடகம் ஆடிய தம்பி, போலீசார் விசாரணையில் வசமாக சிக்கிக் கொண்டார்.

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே பாலப்பட்டியை சேர்ந்த முத்துசாமி, அவரது அண்ணன் சேகரின் அரிசி கடையில் வேலை பார்த்து வந்துள்ளார்.

பக்கத்து ஊர்களுக்கு சென்று அரிசியை விநியோகம் செய்து பணத்தை பெற்றுவந்த முத்துசாமி, திடீரென 52 ஆயிரம் ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து விட்டதாகக் கூறியுள்ளார்.

ஆனால் முத்துசாமி மீது சந்தேகம் அடைந்த அண்ண‌ன் சேகர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து போலீசார் அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த‌தில், அங்கு பறக்கும் படையினர் யாரும் இல்லை என்பது உறுதியானது.

இதன் பின்னர் 37 ஆயிரம் ரூபாய் பணத்தை மது அருந்தி செலவு செய்த‌தால், அண்ண‌னிடம் இருந்து தப்பிக்க இவ்வாறு நாடகம் ஆடியதாக முத்துசாமி ஒப்புக் கொண்டார். அவரை போலீசார் கைது செய்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.