December 5, 2025, 6:21 PM
26.7 C
Chennai

வேல் யாத்திரை நிறைவு: நரிக்குறவ பெண்களுக்கு திருமணம் செய்துவைத்து சீர்வரிசை வழங்கிய பாஜக!

narikuravar-marriage-bjp-helped1
narikuravar-marriage-bjp-helped1

அலங்காநல்லூர்: பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநில தலைவர் எல்.முருகன் அவர்கள் கடந்த நவம்பர் மாதம் ஆறாம் தேதி வேல் யாத்திரையை தொடங்கி டிசம்பர் மாதம் 7ஆம் தேதி திருச்செந்தூரில் யாத்திரையை நிறைவு செய்தார்.

narikuravar-marriage-bjp-helped2
narikuravar-marriage-bjp-helped2

திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் முடிந்து வள்ளி
தெய்வானையை முருகப்பெருமான் திருமணம் செய்வதை நினைவு கூறும் வகையில் வேல் யாத்திரைக்கான
வெற்றி விழாவாக ஏழை நரிக்குறவ பெண்களுக்கு திருமணம் செய்துவைத்து சீர்வரிசை வழங்கப்பட்ட திருமண நிகழ்வு மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சாத்தாவுராயன் கோவிலில்
நடந்துள்ளது.

மாநில பாஜக விவசாய அணி துணைத் தலைவர் முத்துராமன்
தலைமையில் இந்த திருமண நிகழ்ச்சி நடந்துள்ளது.
தொடர்ந்து ஒவ்வொரு அமாவாசை அன்றும் ஒரு நிகழ்வை பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஒவ்வொரு தொகுதியிலும் தேர்தல் முன்னோட்டமாக மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நடத்தப்பட்டு வருகிறது. அதேபோன்று இந்த மாதமும் உசிலம்பட்டியில் நடந்துள்ளது.

பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் அவர்கள் கடந்த ஒரு மாத காலமாக தமிழகம் முழுவதிலும் உள்ள ஆறுபடை வீடுகளில் வேல் யாத்திரையாக சென்று திருச்செந்தூரில் அந்த யாத்திரையை நிறைவு செய்ததைநினைவு கூறும் வகையில் இந்த திருமணத்தை நடத்தி உள்ளதாகவும் மேலும் முருகக்கடவுள் குறவர் பெண்ணை
திருமணம் செய்துள்ளதும் புராணத்தில் இடம் பெற்றுள்ளது.

narikuravar-marriage-bjp-helped3
narikuravar-marriage-bjp-helped3

அதேபோன்று அத்தகைய மரபுப்படி நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களுக்கு திருமணம் செய்து வைத்து அவர்களுடைய வாழ்வாதாரத்திற்கு தேவையான சீர்வரிசை பொருள்களை சுஜாதாமுத்துராமன் வழங்கினார்.

தொடர்ந்து பாஜக சார்பில் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு நிகழ்வாக செய்து உசிலம்பட்டி தொகுதி மக்களின் கவனத்தை மட்டுமல்லாது தமிழக மக்களின் கவனத்தை தேர்தல் நேரத்தில் கவனத்தை ஈற்கும் வகையில்பாஜக சார்பில் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும், தற்பொழுது நரிக்குறவர் சமுதாய மக்களுக்கு குடிமைப் பொருள்கள் எரிவாயு இணைப்பு திருமணம், கல்வி உதவித்தொகை முதியோர் மற்றும் விதவை உதவித் தொகை ஆகியவை கிடைப்பதில்லை.

narikuravar-marriage-bjp-helped4
narikuravar-marriage-bjp-helped4

நிரந்தர முகவரி இல்லாத காரணத்தினால் கல்வி வேலைவாய்ப்பில் நரிக்குறவ இன மக்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் கிடைப்பதில்லை எனவும் நிரந்தரமாக ஒரே இடத்தில் 3- ஆண்டுகளுக்கும் மேல் குடியிருக்கும் இந்த சமுதாய மக்களுக்கு ரேஷன் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு உடனடியாக குடும்ப அட்டை எரிவாயு இணைப்பு உள்ளிட்டவற்றை வழங்குவதற்கு மத்திய மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுபோன்ற நலத்திட்ட உதவிகள் கோரி பலமுறை மாவட்ட நிர்வாகம் வட்ட வழங்கல் அலுவலகம் உள்ளிட்டவற்றில் மனு கொடுத்தும் அதற்கு உரிய பதில் இல்லை என்றும் தெரிவித்தனர்.
உசிலம்பட்டி சமத்துவபுரத்தில் நரிக்குறவ இன மக்கள் பல ஆண்டுகளாக குடியிருந்து வரும் நிலையிலும் அவர்களுக்கு
எந்தவிதமான அத்தியாவசிய தேவைகளும் உதவிகளும் கிடைக்கவில்லை என்றும் மேலும் கூறினர்.

narikuravar-marriage-bjp-helped5
narikuravar-marriage-bjp-helped5

இந்த நிகழ்ச்சியில் , ஓம்சக்தி குங்குமம் சித்த நிறுவனர்தலைவர் சித்தர்கள் மரபு வழி மார்க்கம் மக்கள் பேரவை ஆகவே இரத்தின மாணிக்கம் உலக சித்தர் ஞானபீடம் நிர்வாண ஸ்ரீ ராஜா சுவாமிகள் மற்றும் உசிலம்பட்டி நகர பாஜக தலைவர் பாண்டியராஜன். மாவட்ட பொருளாளர் நல்ல மலை.விவசாய அணி செயலாளர் கலைச்செல்வன் நகர் விவசாய அணி தலைவர் முருகன் செல்லம்பட்டி ஒன்றிய தலைவர் பன்னீர் உள்ளிட்ட நிர்வாகிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories