
பேஸ்புக் இன்ஸ்டாகிராம், வாட்சப் நிறுவனங்களில் பணிநீக்கம் செய்ய ரூ. 8 ஆயிரம் கோடி செலவிட்டுள்ளதாக மெட்டா வெளியிட்ட தகவலில் தெரியவந்துள்ளது. மறுகட்டமைப்பு செலவீனங்களுக்காக மெட்டா நிறுவனம் ஏற்கனவே பல மில்லியன் டாலர்களை செலவிட்டுள்ளது. மெட்டா நிறுவனம் பணிநீக்க நடவடிக்கைக்கு செலவிட்டுள்ள தொகை பற்றிய விவரங்கள் வெளியானது.
மெட்டா நிறுவனம் தனது ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. பல கட்டங்களாக நடைபெற்று வரும் பணிநீக்க நடவடிக்கையில் உலகம் முழுக்க பணியாற்றி வந்த ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், மெட்டா நிறுவனம் 2023 காலாண்டு முடிவுகளை பத்திரங்கள் மற்றும் பரிமாற்ற அறிக்கையில் சமர்பித்து இருக்கிறது.
இதில் மெட்டா நிறுவனம் பணிநீக்க நடவடிக்கைக்கு செலவிட்டுள்ள தொகை பற்றிய விவரங்கள் இடம்பெற்றுள்ளது. பணிநீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கு எவ்வள தொகை செலவிடப்பட்டு உள்ளது என்ற விவரங்களை மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி மெட்டா நிறுவனம் பணிநீக்க ஊதியம் மற்றும் தனிப்பட்ட செவீனங்களுக்கு மட்டும் 1 பில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 8 ஆயிரம் கோடி) செலவாகும் என்று அறிவித்து இருக்கிறது.
மறுகட்டமைப்பு செலவீனங்களுக்காக மெட்டா நிறுவனம் ஏற்கனவே பல மில்லியன் டாலர்களை செலவிட்டுள்ளது. இதில் பணிநீக்க ஊதியம், பாதிக்கப்படும் ஊழியர்களுக்கு நிறுவனம் சார்பில் கொடுப்பதாக அறிவிக்கப்பட்ட இதர பலன்களும் அடங்கும். பணிநீக்க நடவடிக்கைக்கு பெரும் தொகை செலவிடப்பட்டு இருக்கும் நிலையிலும், மெட்டா நிறுவன வருவாயில் இது நல்ல பலன்களை ஏற்படுத்தி இருக்கிறது.
பணிநீக்க நடவடிக்கைகள் காரணமாக 2023 முதல் காலாண்டில் மட்டும் மெட்டா நிறுவன வருவாய் 28.65 பில்லியன் டாலர்கள் ஆகும். இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது மூன்று சதவீதம் அதிகம் ஆகும். வருடாந்திர அடிப்படையில் இது ஆறு சதவீதம் அதிகம் ஆகும். “2022 ஆண்டில் நிறுவனத்தில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய திட்டங்கள் மற்றும் வியாபார கவனம் உள்ளிட்டவைகளை மாற்றியமைக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறோம்.
மார்ச் 31, 2023 வரையிலான காலக்கட்டத்தில் 2022 பணிநீக்க நடவடிக்கைகளை நிறைவு செய்து, டேட்டா செண்டர் மறுகட்டமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு இருக்கிறோம்,” என்று மெட்டா தெரிவித்து உள்ளது.





