சிம்புவுக்கு ஜோடி லட்சுமி மேனனா? பரபரப்பு தகவல்

சினி நியூஸ்

simbu lakshmi menon1சிம்பு படங்கள் வெளியாகி மூன்று வருடங்கள் ஆக போகிறது. சிம்பு நடித்துள்ள வாலு, இது நம்ம ஆளு ஆகிய படங்களின் படப்பிடிப்பு முடிந்தும் ரிலீஸ் செய்வதில் பிரச்சனை வந்து கொண்டிருக்கிறது. இதுதவிர சிம்பு நடிக்கும் அச்சம் என்பது மடமையா படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டி வருகிறது. அதை தொடர்ந்து செல்வராகனுடன் ஒரு படம் கிருத்திகா உதயநிதியுடன் ஒரு படம் என அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி கொண்டே இருக்கிறார் சிம்பு. கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் நடிக்கும் படத்தில் சிம்புக்கு ஜோடியாக நடிக்க வைப்பதற்காக லட்சுமி மேனனை அணுகியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த படம் அழகான காதல், ரொமான்ஸ் மற்றும் சென்டிமென்ட் கலந்த கமர்சியல் படமாக உருவாக்க இருக்கிறார்கள். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.