அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சொத்துகளை சரிபார்க்க லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவு!

உள்ளூர் செய்திகள் கல்வி சற்றுமுன் சென்னை தமிழகம்

04 Aug29 Madras High Court - 2026

அரசுப் பள்ளி ஆசிரியர்களின் சொத்துகளை சரிபார்க்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது!

கல்வித் துறையில் ஊழல் அதிகரித்து விட்டதாகக் கருத்து தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், லஞ்ச ஒழிப்புத் துறைக்கு இத்தகைய உத்தாவைப் பிறப்பித்துள்ளது!

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயோமெட்ரிக் முறையை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது! அரசு பள்ளிகளில் பயோமெட்ரிக் முறையை ரத்து செய்யக்கோரி வழக்கு தொடர்ந்த ஆசிரியர் குறித்து உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது

இதனிடையே லஞ்ச ஒழிப்புத்துறைக்கு வெளியிட்ட உத்தரவில் அரசுப் பள்ளி ஆசிரியர்களின் சொத்துக்கள் சரிபார்க்கப்பட வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது, அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு உதவி பெறும் ஆசிரியர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!

1 thought on “அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சொத்துகளை சரிபார்க்க லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவு!”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.