மோடியை திருடன் என்று கூறியதற்கு வருத்தம் தெரிவித்த ராகுல்!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்

rahul tweet image - 2026

பிரதமர் மோடியை திருடன் என கூறியதற்கு வருத்தம் தெரிவித்துள்ளார் ராகுல் காந்தி!

அண்மையில் பிரச்சாரத்தில் பேசிய ராகுல் காந்தி ‘மோடியை நீதிமன்றமே திருடன் என கூறிவிட்டது’ என கருத்து கூறினார்.

இதற்கு பாஜக., வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக “ரபேல் குறித்த உத்தரவில் மோடியை பற்றி நீதிபதி எதுவுமே கூறாத நிலையில், அவர் பேச்சை ராகுல் திரித்துக் கூறியுள்ளார்.

இது நீதிமன்ற அவமதிப்பு” என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம் சாட்டியிருந்தார்.

அதன் தொடர்ச்சியாக பாரதிய ஜனதா எம்பி மீனாட்சி லேகி, ராகுல் காந்தி மீது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் வரும் 22ஆம் தேதிக்குள் அவர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது, அப்போது, பிரதமர் மோடியை திருடன் என உச்சநீதிமன்றம் கூறிவிட்டதாக சொன்னதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வருத்தம் தெரிவித்தார்.

மேலும், மோடி குறித்து தாம் கூறியது அரசியல் எதிரிகளால் தவறாக பரப்பப்படுவதாக குற்றம் சாட்டிய ராகுல் காந்தி, பரப்புரையில் வேகத்தில் மோடியை பற்றி அவதூறாகக் கூறிவிட்டதாக விளக்கம் அளித்துள்ளார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.