பயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்க முழு ஒத்துழைப்பு: இலங்கை ஜனாதிபதிக்கு மோடி உறுதி!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்

modi srilanka - 2026

பயங்கரவாதத்தை ஒழிக்க முழுமையான ஒத்துழைப்பு அளிக்கப்படும் என்று இலங்கை ஜனாதிபதியிடம் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று (22) பிற்பகல் ஜனாதிபதி மைத்ரீபால சிறீசேனவுடன் சிறப்பு தொலைபேசி உரையாடலை மேற்கொண்டார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள இந்தத் துயரகரமான சூழலில்,  தாம் தனிப்பட்ட முறையிலும், இந்திய அரசாங்கத்தின் சார்பிலும் இலங்கை ஜனாதிபதியிடம் தனது ஆழ்ந்த வருத்தத்தையும், தனது கவலையையும் தெரிவித்துக் கொள்வதாகக் கூறினார் மோடி.

பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு தேவையான எந்தவொரு உதவியையும் இலங்கைக்கு வழங்க தாம் தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த இக்கட்டான சூழலில் இந்திய அரசாங்கமும் மக்களும் இலங்கையின் சகோதர மக்களுடனும் அரசாங்கத்துடனும் கைகோத்திருப்பதாக குறிப்பிட்ட இந்திய பிரதமர் மோடி, இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவு தொடர்ந்து பலமாக இருக்கத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.