
கொரோனாவால்
துபாயில் தவித்தவர்களைக்
காற்று பத்திரமாக
வழிவிட்டு
விமானத்தைக்
கோழிக்கோட்டுக்கு
அனுப்பி வைத்தது.
அவர்களின் வேதனைகளையும்
புலம்பலையும் தவிப்பையும் கண்டு
காற்றே கண்கலங்கி
வழி அனுப்பியது.
ஆனால் தரையில் இறங்கும் முன்
பயணிகளின் ஆனந்தத்தையும்
விமானிகளின் இறக்க முடியா
தவிப்பையும்
யாரிடம் சொல்லுவது
விமானம் மோதி நொறுங்கிய போது
பயணிகளும் காத்திருந்த உறவுகளும்
கண்ணீரால் கலங்கிப் போனார்கள்
விமானத்தில் அறிவித்த
ஆங்கிலமும் இந்தியும் அவர்களுக்கு
ஒன்றும் புரியவில்லை
மலையாளத்தில் சொல்லிருந்தால்
இன்னும் பலர் தப்பி இருக்கலாம்
பயணிகளின் குரல் கேட்கிறது.
இனியாவது புரியும் மொழியில்
சொல்லுங்கள்.
அம்மா, அப்பாவைப் பார்க்க வந்த
குழந்தைகளும்,
குழந்தைகளைப் பார்க்க வந்த
அம்மா, அப்பாகளும்
குழந்தையைப் பிரசவிக்க வந்த
கர்ப்பிணிப் பெண்ணும்
பிரசவிக்கப்போகும் குழந்தையைக்
காணக் காத்திருந்த விமானியும்
இமைக்கும் நேரத்தில்
மரணித்துப் போனார்கள்.
இப்போது காற்றும்
கண்ணீரோடு அசைவற்றுப் போனது
எவ்வளவு சிரமப்பட்டுக் கனவுகளோடு
இப்படிப் பறந்து வந்தவர்கள்
இறந்து போனார்கள்
கொரோனாவின் கோரப்பிடியில்
தப்பியவர்களைத்
தரைமட்டமாக்கியது எப்படி?
கண்ணீருடன்….
- சுபாசு