சென்னை முகப்பேரைச் சேர்ந்தவர் பரதன்… திருவள்ளூர் அருகே நவீன எடைமேடை எந்திரங்களுக்கு உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடையை நடத்தி வருகிறார். இந்த கடையின் லைசன்ஸ் சமீபத்தில் முடிந்துவிட்டது.
அதனால் புதுப்பிப்பதற்காக பரதன், ஆன்லைனில் அப்ளை செய்திருந்தார்.. ஆனால் புதுப்பித்தல் தாமதமாகி கொண்டே இருந்தது.. இதனால் திருவள்ளூர் மாவட்ட தொழிலாளர் துறை ஆபீசில் வேலை பார்க்கும் இன்ஸ்பெக்டர் ஜான்பிரகாஷ் என்பவரிடம் இதை பற்றி தெரிவித்தார்.
உடனே பிரகாஷ், தொழிலாளர் துறை உதவி கமிஷனர் வளர்மதியை போய் பாருங்க. 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் தந்தால், அவங்க கையெழுத்து போட்டுடுவாங்கன்னு சொன்னாராம்.
இதை கேட்டு ஷாக் ஆன பரதன், லஞ்சம் எல்லாம் தர முடியாது என்று சொல்லி உள்ளார்.. அவர் ஒரு பக்கம் லஞ்சம் பற்றியே பேச, பரதனோ அதற்கு பிடி கொடுக்காமல் பேச, இப்படியே கடைசிவரை இழுத்தடிக்கப்பட்டு, லைசென்சும் புதுப்பிக்க முடியாமலேயே இருந்திருக்கிறது..
இறுதியில் பரதன், லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி. லவக்குமாரிடம் புகார் செய்தார். இதையடுத்து வளர்மதி வீட்டுக்கு லஞ்ச ஒழிப்பு துறையினர் சென்றனர். ஆனால் முன்னதாகவே விஷயத்தை கேள்விப்பட்ட வளர்மதி, இன்ஸ்பெக்டர் பிரகாஷ், உதவி இன்ஸ்பெக்டர் ரவி, ஆபீஸ் உதவியாளர் முருகவேல் ஆகிய 4 பேரும் எஸ்கேப் ஆகிவிட்டனர்.
இதனால் ஏமாற்றமடைந்த அதிகாரிகள், வளர்மதி வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று சோதனை நடத்தினர். அங்கே சில முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளதாக தெரிகிறது.. அவைகளை எடுத்து கொண்டு, வளர்மதி வீட்டை பூட்டி சீல் வைத்தனர். இன்னும் வளர்மதி கிடைக்கவில்லை.. அவர் உட்பட தலைமறைவாக உள்ள 4 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்