இலங்கை… தற்கொலைப் படைத் தாக்குதலில் ஈடுபட்ட 9 பேரில் ஒருவர் பெண்!

இந்தியா உலகம் சற்றுமுன் லைஃப் ஸ்டைல்

srilanka churcharmy - 2026

இலங்கையில் தற்கொலைப் படைத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் ஒன்பது பேர் என்றும், அவர்களில் ஒருவர் பெண் என்றும் தெரியவந்துள்ளது.

இலங்கையின் தற்போதைய நிலவரம் குறித்து அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் ருவான் விஜயவர்தன செய்தியாளர்களிடம் கூறுகையில்,
இன்னும் இரு நாட்களில் இலங்கையின் பாதுகாப்பு நிலவரம் உறுதிப்படுத்தப்படும். இரண்டு குழுக்களாகப் பிரிந்து பயங்கரவாத அமைப்பினர் செயல்படுவது தெரிய வந்துள்ளது. இந்தத் தாக்குதலில் பயங்கரவாத அமைப்பின் ஒரு பிரிவின் தலைவனே மனித வெடிகுண்டாக மாறி உயிரிழந்திருப்பது தெரிய வந்துள்ளது.

தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளின் அடையாளத்தை உடனடியாக இப்போது வெளியிட முடியாது. அது, எங்களின் விசாரணையை பாதிக்கும் என்பதால் பயங்கரவாதிகளின் பெயர் உள்ளிட்ட விவரங்களை வெளியிடாமல் ரகசியம் காக்கின்றோம்.

தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 359 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 39 பேர் வெளிநாட்டினர். இவர்களில் 17 வெளிநாட்டினரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதல் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது… என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இந்த தொடர் வெடிகுண்டு தாக்குதல் தொடர்பாக, கைது செய்யப் பட்டவர்களின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது!

மேலும் இந்த குண்டுவெடிப்பு தாக்குதல்களில் தற்கொலைப் படையைச் சேர்ந்த 9 பேர் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பு தாக்குதல்களில் தற்கொலைப் படையைச் சேர்ந்த 9 பேர் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

இந்த ஒன்பது பேரில் ஒருவர் பெண் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.