டிவிட்டர் வாழ்த்து மழையில் நனையும் சச்சின்! #பிறந்தநாள் வாழ்த்துக்கள் சச்சின்

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல் விளையாட்டு

sachin tendulkar - 2026

இந்தியாவின் மாஸ்டர் பேட்ஸ்மென், சர்வதேச கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் இன்று தன் 46வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். டிவிட்டரில் இன்று ரசிகர்கள் சச்சினுக்கு தங்கள் பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்திய கிரிக்கெட்டுக்கு விறுவிறுப்பும் வித்தியாசமும் சேர்த்து சாதனைகளின் பட்டியலில் இந்தியாவின் பெயரை இடம்பெறச் செய்தவர் சச்சின். தன்11 வயது முதல் கிரிக்கெட் விளையாடிய சச்சின் கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். தொடர்ந்து கடந்த 2013ல் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

04 May 08 sachin - 2026பின் சர்வதேச டெஸ்டில் இதுவரை எந்த வீரரும் விளையாடாத அளவு 200வது டெஸ்டில் பங்கேற்று 2013 நவம்பர் 16ல் தன் 24 வருட சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கைக்கு விடை கொடுத்தார்.04 June26 Sachin Tendulkar - 2026

அர்ஜூனா, ராஜீவ் காந்தி கேல் ரத்னா, பத்மஸ்ரீ, பத்ம விபூஷன் விருதுகளை பெற்றுள்ள சச்சின், இன்று தனது 46வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள் டிவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாக்ராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.