புர்கா அணிந்து சென்றவரால் பதற்றம்! இலங்கையின் பார்வையே மாறுகிறது!

உரத்த சிந்தனை உலகம் சற்றுமுன்

srilankapurga man - 2026

இலங்கை, வத்தளையில் புர்கா அணிந்து சென்றவரால் பதற்றம் ஏற்பட்டது. தொடர்ந்து, பாராளுமன்ற உறுப்பினருக்கு தொலைபேசி எச்சரிக்கை அனுப்பப் பட்டதாக செய்தி வெளியானது.

வத்தளையில் ஆன் ஒருவர் அரபு இஸ்லாமிய அடையாளங்களுடன் புர்கா அணிந்து சென்ற சம்பவத்தால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

புர்கா அணிந்த ஒருவர் வத்தளை பகுதியில் சென்றுள்ளார். அந்த நபரின் நடவடிக்கை மீது, பொதுமக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவரை சுற்றிவளைத்த மக்கள் அவரை சோதனை செய்ய முயற்சி செய்துள்ளனர்.

இந்நிலையில் அங்கு பதற்றம் ஏற்பட்டது. அந்த நபர் குறித்து சந்தேகம் நீடித்ததால், பதற்ற நிலை ஏற்பட்டதாகத் தெரிய வருகிறது. அதேநேரம் அந்த நபர் குறித்தும் உடனே போலீஸாருக்கு பொதுமக்கள் தகவல் அளித்துள்ளனர்.

இதனிடையே, நேற்று பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர், புர்கா அணிவதை தடை செய்ய வேண்டும் என பாராளுமன்றத்தில் யோசனையைக் கொண்டு வந்திருந்தார். இதை அடுத்து, அவரை எச்சரிக்கும் வகையிலான இரு மிரட்டல் தொலைபேசி அழைப்புகள், அந்தப் பாராளுமன்ற உறுப்பினருக்கு வந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.