அடுத்த ஒன்றரை நாளில்… புயல்! மீனவர்கள்28ம் தேதிக்குள் கரை திரும்ப அறிவுறுத்தல்!

இந்தியா உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம்

cyclone1 - 2026

காற்றழுத்த தாழ்வு மண்டலமானது தற்போது சென்னை தென்கிழக்கே 1490 கி.மீ தொலைவிலும், மசூலிப் பட்டினத்திற்கு தென்மேற்கே 1760 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 24 மணிநேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக மாறும் என்று கூறியுள்ள இந்திய வானிலை ஆய்வு மையம்,  இது வடமேற்கு திசையில் நகர்ந்து, வரும் 30-ம் தேதி வடதமிழகம் மற்றும் கிழக்கு ஆந்திர கடல்பகுதியை நெருங்கும்  என்று எச்சரித்துள்ளது.

வட தமிழகம் மற்றும் கிழக்கு ஆந்திராவில் ஏப்.30 மற்றும் மே 1-ம் தேதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும்  என்று கூறியுள்ள வானிலை ஆய்வு மையம்,  ஆழ்கடல் பகுதியில் மீன்பிடிக்க சென்றவர்கள் வரும் 28-ஆம் தேதிக்குள் கரை திரும்ப வேண்டும் என்று  அறிவுறுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.