இந்த அமாவாசையிலாவது வசதிகள் செய்துதரப் படுமா? சதுரகிரி பக்தர்கள் எதிர்பார்ப்பு!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் தமிழகம் மதுரை

sathuragiri mahalingam - 2026விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வத்திராயிருப்பு பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சந்தன மகாலிங்கம் கோயில் உள்ளது

இங்கே சித்திரை மாத அமாவாசையை முன்னிட்டு மலைக் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கூடுதல் குடிதண்ணீர் வசதி மற்றும் இதர வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு ஒவ்வொரு தமிழ் மாதமும் பவுர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில் நான்கு நாட்களில் பக்தர்கள் அனுமதிக்கப் படுவது வழக்கம்

sathuragiri - 2026

தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் மே இரண்டாம் தேதி முதல் கோயிலுக்கு அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தற்போது அதிகரித்து வரும் வெயில் காரணமாக சதுரகிரி மலைப்பகுதியில் போதிய குடிநீர் வசதிகள் இல்லை

இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு கூடுதல் குடிநீர் வசதி செய்து தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.