திருமண வீட்டு ஸ்பெஷல்! இலை பருப்பு!

சமையல் புதிது நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
leaf-dhall

இலை பருப்பு

தேவையானவை:
துவரம்பருப்பு. – ஒரு கப்,
மஞ்சள்தூள். – ஒரு டீஸ்பூன்,
உப்பு. – தேவைக்கேற்ப.

தாளிக்க:
கடுகு, பெருங்காயம் – சிறிதளவு, எண்ணெய் – ஒரு டீஸ்பூன்.

செய்முறை:
துவரம்பருப்பை தேவையான அளவு நீர் விட்டு மஞ்சள்தூள் சேர்த்து, குழைவாகவும், கெட்டியாகவும் வேகவைத்து, உப்பு சேர்த்துக் கலக்கவும். தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து இதில் சேர்க்கவும்.

இது சாதத்தில் போட்டு, நெய் விட்டுப் பிசைந்து சாப்பிட மிகவும் ஏற்றது. திருமண வீடுகளிலும், பண்டிகை சமயத்தில் வீட்டிலும் முதலில் இதை சாப்பிட்ட பிறகுதான் அடுத்தவற்றைச் சாப்பிடுவார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.