IMG 20220502 WA0006 - 2026

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் கொதிகலன் குழாய் உடைப்பு- 600 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தம்..

சற்றுமுன்

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் இரண்டாவது பிரிவில் இன்று கொதிகலன் குழாய் உடைப்பு ஏற்பட்டதால் 600 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் இரண்டு பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. முதல் பிரிவில் தலா 210மெகா வாட் திறன் கொண்ட நான்கு அலகுகளும் இரண்டாவது பிரிவில் 600 மெகாவாட் திறன் கொண்ட ஒரு அலகும் உள்ளது.

நிலக்கரி பற்றாக்குறை காரணமாக மேட்டூர் அனல் மின் நிலையத்தில் முதல் பிரிவில் 2, 3 மற்றும் 4-வது அலகுகளில் நேற்று மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. 1-வது அலகு மட்டும் இயக்கப்பட்டது.

  இந்த நிலையில்  இன்று காலை இரண்டாவது பிரிவில் கொதிகலன் குழாயில் வெடிப்பு ஏற்பட்டதால் 600 மெகாவாட் மின் உற்பத்தி முற்றிலும் நிறுத்தப்பட்டது.

முதல் பிரிவில் இன்று காலை முதல் 4-வது அலகும் இயக்கப்படுகிறது. 1வது அலகிலும் 4-வது அலகிலும் தலா 175 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இரண்டாவது பிரிவில் உள்ள 600 மெகாவாட் திறன் கொண்ட அலகில் மின் உற்பத்தி முழுமையாக நிறுத்தப்பட்டது.

IMG 20220502 WA0006 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.