சேலத்தில் இரயில் பெண் பயணிகளை குலை நடுங்க வைக்கும் கொடூரம்.

உள்ளூர் செய்திகள் கிரைம் நியூஸ் கோவை தமிழகம்

 

kanyakumari rail - 2026

சேலத்தில் இரயில் பெண் பயணிகளை குலை நடுங்க வைக்கும் கொடூரம்.

 

ஈரோடு – சேலம் தடத்தில் மகுடஞ்சாவடி அருகே இரயில்வே துறையினா் மேற்கொண்டு வரும் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் அந்த பகுதிகளை கடக்கும் ரயில்கள் மிக மெதுவாக இயக்கப்படுகின்றன. இதனைப் கொள்ளையா்கள் தங்களுக்கு சதகமாக பயன்படுத்தி, ஓடும் ரயிலில் ஏறும் கெள்ளையர்கள் அதிக அளவில் பெண் பயணிகளிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம், நகைகளை கொள்ளையடித்துவிட்டு தப்பிவடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனா்.

நேற்று முன் தினம் அதிகாலையில் 4 ரயில்களிலும் நேற்று அதிகாலையில் 2 ரயில்களிலும் கொள்ளையர்கள் கைவரிசையை காட்டி உள்ளனா். இக்கொள்ளை சம்பவங்களை தடுக்கும் வகையில் ரயில்வே போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனர். இந்நிலையில் இன்று காலை பயணிகளுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரைத் தாக்கிவிட்டு கொள்ளையர்கள் தப்பிச் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதனையடுத்து மகுடஞ்சாவடி பகுதியில் தண்டவாளம் நெடுகிலும் துப்பாக்கி ஏந்திய 500 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இங்கு கொள்ளையர்கள் மும்பையில் செயல்படும் தக் தக் கொள்ளையர்களை போல் செயல்படுகின்றனர்.

ரயில் மற்றும் பேருந்துகளில் திடீரென ஏறும் 10 முதல் 20 பேர் பயணிகளை தாக்கிவிட்டு அவர்கள் வசம் இருக்கும் பணத்தை பறித்துவிட்டு மின்னல்வேகத்தில் தப்புவது தக் தக் கேங். அவர்கள் மகுடஞ்சாவடி வந்திருக்கலாம் என்கிற ஐயத்தில் அதிகாரிகளும் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.