vizhupuram kailasanathar - 2026

தொரவி கைலாசநாதர் கோவில் கருவறை கோபுரத்தில் சந்தனக் கல் பதிக்கும் பூஜை!

சற்றுமுன் ஆலயங்கள் உள்ளூர் செய்திகள் சென்னை
vizhupuram kailasanathar - 2026

தொரவி கைலாசநாதர் கோவில் கருவறை கோபுரத்தில் சந்தனக் கல் பதிக்கும் பூஜை நடந்தது.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த தொரவி பெரியநாயகி உடனுறை கைலாசநாதர் கோவில் திருப்பணி நடைபெற்று வருகிறது.

கருவறை கோபுரம் மூன்று நிலைகளில் கட்டப்பட்டுள்ளது. நேற்று காலை கோபுர விமானத்தில் சந்தனக்கல் பதிக்கும் பூஜை நடந்தது. அதனையொட்டி, நந்தி, சிவகாமி உடனுறை நடராஜருக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் மகா தீபாராதனை செய்து கோபுர விமான பகுதியில் சந்தனக்கல் பதித்தனர்.

theravi kovil - 2026

சிவனடியார்கள் தேவநாதன், ரவிச்சந்திரன், சிவக்குமார், ஜோதிடர் கார்த்திகேயன் ஆகியோர் திருவாசகம் முற்றோதினர். பூஜைகளை புதுச்சேரி சரவணன் செய்தார்.

தொரவி ஊராட்சி தலைவர் சங்கர், துணைத் தலைவர் வினோத், வில்லியனுார் ஸ்தபதி சிவமணி, கோர்ட் கண்காணிப்பாளர் பாலாஜி, வருவாய்த் துறை சந்திரவள்ளி, விஜயகுமார், பாபு, தமிழ்ச்செல்வி மற்றும் கிராம மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.