எந்த ஒரு இந்துவும் தீவிரவாதி ஆக இருக்க முடியாது: கமலுக்கு மோடி பதில்!

இந்தியா சற்றுமுன்

modi ji - 2026

ஜெயலலிதா மரணத்துக்குப் பின்னர் அரசியல்வாதி அரிதாரம் பூசிய நடிகர் கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் என்ற அமைப்பு போன்ற கட்சியைத் துவக்கி, தேர்தலில் முதல்முறையாக போட்டியிடுகிறார்.

மக்கள் நீதி மய்ய வேட்பாளரை ஆதரித்து, அரவக்குறிச்சி சட்டப் பேரவை இடைத்தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார் கமல். இஸ்லாமியர்கள் அதிகம் பேர் வசிக்கும் பகுதியில் பிரசாரம் செய்த கமல், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதியே ஒரு இந்து! அவன் பெயர் கோட்சே என்று கூறினார்.

இவரது கருத்து சமூகத்தை மத ரீதியாகப் பிளவுபடுத்துகிறது என்று கூறி அவருக்கு எதிர்ப்புகள் வலுத்தன.

தன்னை அறிவுஜீவி என்றும், மாற்றத்துக்கான மாவீரன் என்றும் பில்டப் கொடுத்து அரசியலுக்குள் வந்த கமல்ஹாசன், ‘லோக்கல்’ தரை டிக்கெட்களான சீமான், திருமாவளவன் போன்றவர்கள் பேசுவது போல் அரவக்குறிச்சியில் தேர்தல் பிரசாரத்தில் பேசியது பலருக்கும் அதிர்ச்சியை அளித்தது. கமல் தேசிய அளவில் திரைப்படங்களில் நடித்து பிரபலம் ஆனவர் என்பதால், அவரது கருத்து தேசிய அளவில் கடும் விமர்சனங்களைச் சந்தித்தது.

குறிப்பாக, கமல் குறிப்பிட்ட கோட்சே மராட்டியர் என்பதால், பாலிவுட் திரையுலகில் இருந்து முதல் எதிர்ப்புக் குரல் வெடித்தது.

இந்நிலையில், கமலின் கருத்துக்கு பதில் அளித்திருக்கிறார் பிரதமர் மோடி.

பிரதமர் மோடியிடம் நியூஸ் X சேனல் செய்தியாளர் பேட்டி கண்டபோது, அவரிடம் கமல் கருத்து குறித்து கேள்வி எழுப்பப் பட்டது. அதற்கு பதிலளித்த பிரதமர் மோடி, “நான் அறிவுஜீவி கிடையாது, கமல ஹாசன் அளவிற்கு! ஆனால் எந்த இந்துவும் தீவிரவாதியாக இருக்க மாட்டான், தீவிரவாதியாக இருப்பவன் இந்துவாக இருக்க மாட்டான்” என்று கூறினார். #KamalHaasan

எந்த ஒரு இந்துவும் தீவிரவாதியாக இருக்க முடியாது; ஒருவர் தீவிரவாதியாக இருந்தால் நிச்சயம் அவர் இந்துவாக இருக்க முடியாது என்று பிரதமர் மோடி கூறிய கருத்து இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.