செலஷியல் பாடீஸ்- புத்தகத்துக்கு புக்கர் பரிசு பெற்ற அரபி எழுத்தாளர்!

உலகம் சற்றுமுன் லைஃப் ஸ்டைல்

Jokha Alharthi wins for Celestial Bodies - 2026

ஓமன் நாட்டைச் சேர்ந்த பெண் எழுத்தாளர் ஜோகா அல்ஹாரதி, சர்வதேச புக்கர் பரிசை வென்று அசத்தியுள்ளார். சிறந்த புத்தகங்களுக்காகத் தரப்படும் இந்தப் பரிசைப் பெற்ற முதல் அரபி மொழி எழுத்தாளர் இவர் என்ற பெருமை கிடைத்துள்ளது.

ஓமன் நாட்டைச் சேர்ந்த பெண் எழுத்தாளரான ஜோகா அல் ஹரத்தி எழுதிய செலஷியல் பாடீஸ் என்ற புத்தகத்திற்காக புகழ்பெற்ற சர்வதேச மேன் புக்கர் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பரிசினைப் பெற்ற முதல் அரபி எழுத்தாளர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் ஜோகா அல்ஹாரத்தி.

லண்டனில் நடந்த பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் ஜோகாவுக்கு 50 ஆயிரம் பவுண்ட் (சுமார் ரூ. 44 கோடி) பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பரிசு தொகையில் பாதியை புத்தகத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவருக்கு வழங்க உள்ளதாக ஜோகா கூறியுள்ளார்.

First female Omani novelist to be translated into English shares £50,000 prize with translator Marilyn Booth – the first time an Arabic book has won

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.