காங்கிரஸ் கட்சிக்காக நாடாளுமன்றத் தேர்தலில் கடும் பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில் உடல் நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து நடிகை குஷ்புவுக்கு ஆபரேஷன் நடந்தது.
நடிகை குஷ்புவுக்கு அறுவை சிகிச்சை நடந்துள்ளது. அவர் உடல் நலத்துடன் இருப்பதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.
மக்களவை தேர்தலின்போது தொடர்ந்து பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார் குஷ்பு. இந்நிலையில் அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டது.
இதையடுத்து சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். பின்னர் அவருக்கு நேற்று அறுவை சிகிச்சை நடந்தது.
இப்போது அவர் நலமாக இருப்பதாகவும் விரைவில் வீடு திரும்புவார் என்றும் அவருக்கு நெருங்கியவர்கள் தெரிவித்தனர்.
குஷ்பூ இதனை தன் ட்விட்டர் பதிவுகளிலும் தெரிவித்துள்ளார்

