ராகுலை வீழ்த்தியதை டிவிட்டரில் கொண்டாடிய ஸ்மிருதி இரானி

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்

smriti rahul - 2026

ராகுலை வீழ்த்தியதை டிவிட்டரில் கொண்டாடினார் பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இரானி.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை அவரது சொந்த தொகுதியான அமேதியில் வீழ்த்தியதை தனது டிவிட்டரில் உற்சாக இந்தி பாடல் வரி மூலம் அவர் குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல், கடந்த 15 ஆண்டுகளாக எம்.பி.யாக இருந்த தொகுதி அமேதி. இது இந்திரா காந்தி குடும்பத்தின் கோட்டையாக இருந்த தொகுதி. இங்கு கடந்த 2014ம் ஆண்டு தேர்தலில், ராகுலை எதிர்த்து பா.ஜ சார்பில் போட்டியிட்ட ஸ்மிருதி இரானி 1.07 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

ஆனால் இந்தத் தேர்தலில் அவர் ராகுலை வீழத்தி விட்டார்.

‘வானத்தில் துளை இல்லை என யார் சொன்னது’ என்ற உற்சாகமான இந்தி பாடல் வரியை ஸ்மிருதி இரானி குறிப்பிட்டு இந்த வெற்றியைக் கொண்டாடியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.