தெலங்கானா உருவான தினம் கோலாகலம்

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்

IMG 20190602 WA0010 - 2026

இன்று தெலங்கானா மாநிலம் உதித்த நாளான ஜூன் இரண்டாம் தேதி. இதை முன்னிட்டு தெலங்கானா மாநிலத்தில் பல்வேறு கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது அதன் ஒரு பகுதியாக  தெலங்கானா அரசு நல்ல செய்தியை வெளியிட்டுள்ளது.

அரசு ஊழியர்களுக்கு டீஏ உயர்த்தப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது .

IMG 20190602 WA0011 - 2026மேலும் ஹைதராபாத் சிறப்பு தலைமைச் செயலர் ஆதார் சின்ஹாவும் ஆணையர் தானா கிஷோரூம் தெலங்கானா மாநிலம் உருவான நாளான இன்றைய தின கொண்டாட்டங்களை சிறப்பாக கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்துள்ளார்கள்.

பப்ளிக் கார்டனில் பெரிய அளவில் 5000 பேர் அமரக்கூடிய அரங்கில் விழா நடைபெறுகிறது.

தெலங்கானா தியாகிகள் நினைவிடம், கன் பார்க் போன்ற இடங்களை நன்கு அலங்கரித்து உள்ளார்கள்.

தெலங்கானா மாநிலம் உருவான தினத்தை முன்னிட்டு இன்று காலை தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் போர் வீரர்களின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார் .

அரசு ஊழியர்கள், ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு டிஏ 3 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த அதிகரிப்பு ஜூலை 2018 ஒன்று முதல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தெலங்கானா அரசு சனிக்கிழமை அரசாணை வெளியிட்டது.

ஜில்லா பரிஷத் ஊழியர்கள், மண்டல கிராம பஞ்சாயத்து, முனிசிபாலிட்டி, முனிசிபல் கார்ப்பரேஷன், அக்ரிகல்சுரல் மார்க்கெட் கமிட்டி, மாவட்ட நூலக அமைப்பில் பங்கு கொள்பவர்கள் கூட டீஏ அதிகரிப்பை பெறுகிறார்கள் .

2015 திருத்தப்பட்ட பணப் பட்டியல் படி சம்பளம் பெறும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியப் பணியில் அல்லாத ஊழியர்கள் கூட இந த டிஏ அதிகரிப்பு பலனைப் பெறுகிறார்கள்.

ஆறாவது ஆண்டில் தெலங்கானா மாநிலம் அடி எடுத்து வைக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.