December 5, 2025, 2:49 PM
26.9 C
Chennai

பட்டுன்னு போகும் பொடுகு.. பொடுதலை கீரை!

poduthalai kirai
poduthalai kirai

பொடுதலைக்கீரை

பொடுதலை முழுத் தாவரமும் துவர்ப்புச் சுவைகள் கொண்டது. வெப்பத் தன்மையானது.

பொடுதலை தாதுக்களைப் பலப்படுத்தும்; கோழை அகற்றும்; உள் உறுப்புகளின் புண்களை ஆற்றும்.பொடுதலை வீக்கத்தைக் கரைக்கும்; சிறு நீரைப் பெருக்கும்; சீதக் கழிச்சல், இருமல், வெள்ளை படுதல் போன்றவற்றையும் குணமாக்கும்.

பொடுதலை சிறுசெடி வகையைச் சார்ந்தது. தரையோடு கிடைமட்டமாக படர்ந்து வளரும். பற்கள் கொண்ட சொர சொரப்பான கரண்டி வடிவ இலைகளையும், கதிரான பூங்கொத்துகளையும் உடையது.

பொடுதலை ஆண்டு முழுவதும் பூக்கள், காய்களுடன் காணப்படும். பொடுதலை மலர்கள் சிறியவை. கருஞ்சிவப்புடன் கூடிய வெண்ணிறமானவை. பிளவுபட்ட நாக்குப் போன்ற தோற்றம் உடையவை.

பூற்சாம், பொறுதலை ஆகிய மாற்றுப் பெயர்களும் பொடுதலை தாவரத்திற்கு உண்டு. முழுத் தாவரமும் மருத்துவப் பயன் கொண்டது. பொடுதலை இலை, காய் ஆகியவை அதிகமான மருத்துவப் பயன் கொண்டவை.

பொடுகு பிரச்சனை குறைய, முடி உதிர்வதை தடுக்க பசுமையான பொடுதலை இலைகளை தேவையான அளவில் சேகரித்துக் கொண்டு, ஒரு கண்ணாடி சீசாவில் இட்டு அவை மூழ்கும் அளவிற்கு நல்லெண்ணெய் ஊற்றி சூரிய வெளிச்சத்தில் 21 நாள்கள் வைத்திருக்க வேண்டும். பின்னர் வடிகட்டி சீசாவில் வைத்துக் கொண்டு தினமும் தலையில் தேய்த்து வர வேண்டும்.

பொடுதலை 150 கிராம், தோலுரித்த சின்ன வெங்காயம் 250 கிராம், வெந்தயம் 50 கிராம் மூன்றையும் இடித்து இரும்பு வாணலியில் ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெய்விட்டு அதில் மேற்படி சரக்கை கலந்து சிறு தீயில் எரிக்கவும். நீர் சுண்டி தீயாமல் மிதக்கும் பக்குவத்தில் இறக்கி, ஆறவிட்டு வடிகட்டி பத்திரப்படுத்தவும், இதை தினமும் தேங்காய் எண்ணெய்க்கு பதிலாக தலையில் தேய்த்து தலைவாரிக் கொள்ள வேண்டும்.

பொடுகுக்கு மேற்பூச்சு மட்டும் முழு பலனளிக்காது. உள்ளுக்கும் பொடுதலை இலைகளை நெய்விட்டு வதக்கி, புளி, உப்பு, மிளகாய் போட்டு சேர்த்து துவையல் செய்து சாப்பிட பொடுகு குணமாகும்.

பொடுதலை இலையுடன் சம அளவு சீரகம் சேர்த்து அரைத்து நெல்லிக்காய் அளவு எருமைத் தயிர் அல்லது வெண்ணெயில் கலந்து குடிக்க வேண்டும். காலையில் மட்டும் 10 நாள்கள் இவ்வாறு தொடர்ந்து செய்து வர வெள்ளைபடுதல் குணமாகும்.

poduthalai kirai 1
poduthalai kirai 1

பொடுதலை இலையை நெய்விட்டு வதக்கி மிளகு, சீரகம், உப்புச் சேர்த்து சாப்பிட சீதபேதி குணமாகும்.

குழந்தைகளுக்கான கழிச்சல் குணமாக ஒரு கைப்பிடி அளவு பொடுதலை இலைகளை வதக்கி, 10 கிராம் வறுத்த ஓமத்துடன் சேர்த்து அரைத்து ஒரு லிட்டர் நீரிலிட்டு ஒரு லிட்டராகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி இரண்டு பாலைடை அளவு உள்ளுக்குள் கொடுக்க வேண்டும்.

3 மணி நேரத்திற்கு ஒரு முறை அதிகபட்சமாக ஒரு நாளைக்கு 4 வேளை வரை கொடுக்கலாம்.

தலைப்பொடுகைக் குணமாக்கும் சிறப்பு கொண்டதாலேயே பொடுதலை என்கிற பெயர் இந்த தாவரத்திற்கு ஏற்பட்டது. பொடுதலை இலைகளை அரைத்து பசையாக்கி, தலையில் தேய்த்து 4 மணி நேரம் ஊற வைத்துக் குளிக்க பொடுகு கட்டுப்படும்.

தலைக்கான சீயக்காய் மற்றும் கூந்தல் தைலங்களின் தயாரிப்பில் பொடுதலை முக்கிய இடம் பெறுகின்றது

பொடுதலை இலைகளை அரைத்து தலைவலி உள்ள பகுதியில் பற்று போட்டால் ஒற்றைத் தலைவலி விரைவில் நீங்கும்.

நீரிழிவு நோய்: நீரிழிவு நோயின் தாக்கம் உள்ளவர்களுக்கு பொடுதலை சிறந்த மருந்தாகிறது. பொடுதலையை சுத்தம் செய்து அதனுடன் பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து நெய் விட்டு வதக்கி சட்னி செய்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயின் தாக்கம் வெகுவாக குறையும்.
.
இருமல் பாதிப்புள்ளவர்கள் பொடுதலை இலையை சுத்தம் செய்து அதனுடன் பாசிப்பருப்பு கலந்து வேகவைத்து கூட்டு செய்து சாப்பிட்டு வந்தால் இருமல் குணமாகும்.

அக்கிப் புண்: உடல் சூட்டால் உடலில் சிறு சிறு கட்டிகள் தோன்றி கொப்புளங்களாக உருவாகும். இதனை அக்கி என்பர். இது உடலில் அதிக எரிச்சலை உண்டாக்கும். பாதிக்கப்பட்டவர்கள், பொடுதலையை நன்கு மைபோல் அரைத்து அக்கியின் கொப்புளங்கள் மீது தடவினால் எரிச்சல் நீங்குவதுடன் கொப்புளங்கள் உடைந்து புண்கள் விரைவில் ஆறும்.

பொடுதலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து தினமும் காலையில் 1 தேக்கரண்டி பொடியுடன் தேன் கலந்து சாப்பிட்டு வரவேண்டும். அல்லது காலை, மாலை இருவேளையும் கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால் வெள்ளைப்படுதல் குணமாகும்.

சிறுநீரக நீர்த்தாரைப்புண்: நூறு கிராம் பொடுதலை இலையை அரை டம்பளர் நீரிலிட்டுகாய்ச்சி கால்பாகம் சுண்டின பின் வடிகட்டி அதை இரண்டு பங்காக்கி காலை, மாலை குடித்து வர சிறுநீரிலுள்ள இனிப்பை மாற்றும். இக்கஷாயத்துடன் வால்மிளகு, சூரணம் சேர்த்து குடித்துவர சிறுநீரக நீர்த்தாரைப்புண் குணமாகும்.

பொடுதலை இலையை நன்கு மைபோல் அரைத்து அக்கி கொப்புளங்கள் மீது தடவினால் எரிச்சல் நீங்குவதுடன் கொப்புளங்கள் உடைந்து புண்கள் விரைவில் ஆறும்.

விரைவீக்கத்தால் பாதிக்கபட்டவர்கள் பொடுதலையை மைபோல் அரைத்து வீக்கம் உண்டான பகுதியில் பற்று போல போட்டால் விரைவீக்கம் குறையும்.

பொடுதலை கீரையை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொண்டால் கருப்பை வலுப்பெறும்.

பொடுதலை இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து, நல்லெண்ணெய் சேர்த்து தலையில் தேய்த்து ஊறிய பின் குளித்து வந்தால் தலையிலுள்ள சொறி, சிரங்கு குறையும்

பொடுதலை இலையுடன் உளுந்து சேர்த்து நெய்யில் வதக்கி துவையல் செய்து மதிய உணவுடன் சாப்பிட்டு வர உள் மூலம், இரத்த மூலம் பவுத்திரம் தீரும்.

பொடுதலையுடன் இஞ்சி, புதினா, கொத்தமல்லி, கருவேப்பிலை சேர்த்து துவையலாக்கி சோற்றில் நெய்யுடன் உண்ண மார்புச்சளி, சுவாச காசம் தீரும்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories