இன்றும் 18 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம்! தென்காசிக்கு புதிய ஆட்சியர் எஸ்.கோபால சுந்தர்ராஜ்!

Published:

tnsecretariat
tnsecretariat

தமிழகத்தில் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் செய்யப் பட்டுள்ளனர். தமிழகத்தில் 18 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதன்படி…
கோபால சுந்தரராஜ்- தென்காசி மாவட்ட ஆட்சியர்
சந்திரகலா- ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர்
கண்ணன்- ஹிந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர்
விபூ நாயர்- சிறப்பு செயலாக்கத்துறை முதன்மை செயலர்
மங்கத் ராம் சர்மா- சமூக சீர்திருத்த முதன்மை செயலர்

சங்கர்லால்- வணிக வரித்துறை இணை ஆணையர்
மகேஸ்வரி- வேளாண் துறை மற்றும் விவசாயிகள் நலத்துறை இணை செயலர்
சீத்தாலெட்சுமி- வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை இணை ஆணையர்
வளர்மதி- சமூக பாதுகாப்புத்துறை இயக்குநர்
நிஷாந்த் கிருஷ்ணா- ஒசூர் கூடுதல் ஆட்சியர்

ஆகாஷ்- சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் துறை மற்றும் கழிவுநீரகற்று வாரிய இயக்குநர்
உமா மகேஸ்வரி – டிஎன்பிஎஸ்சி செயலர்…
என 18 ஐ ஏ எஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப் பட்டுள்ளனர்.

gopal sundarraj tenkasi collector

தென்காசி புதிய மாவட்ட ஆட்சியராக S.கோபால சுந்தரராஜ் IAS..நியமிக்கப் பட்டுள்ளார்.

ALSO READ:  பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

கடந்த சில நாட்களுக்கு முன்பு தென்காசி மாவட்ட ஆட்சியராக J. U சந்திரகலா நியமிக்கப்பட்டு அறிவிப்பு வெளியானது. ஆனால் அவர் இன்னும் பணியில் சேராத நிலையில், அவர் ராமநாதபுரத்துக்கு மாற்றப்பட்டு புதிய மாவட்ட ஆட்சியராக S. கோபால சுந்தர் ராஜ் IASஐ நியமனம் செய்துள்ளது தமிழக அரசு.

தமிழ்நாடு குடிசைமாற்று வாரிய இணை மேலாண்மை இயக்குநர் மற்றும் திட்ட இயக்குநர் எஸ்.கோபால சுந்தரராஜ் மாற்றப்பட்டு, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டிருந்தார். இவர் தற்போது அங்கிருந்து மாற்றப்பட்டு தென்காசி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு பெண்கள் வளர்ச்சிக் கழக நிர்வாக இயக்குநர் சந்திரகலா மாற்றப்பட்டு, தென்காசி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டிருந்தார். இவர் தற்போது இங்கிருந்து மாற்றப்பட்டு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

kavitharamu chandraleka gayatrikrishnan ias officers
kavitharamu chandraleka gayatrikrishnan ias officers

S கோபால சுந்தர்ராஜ் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகேயுள்ள மயில் தோப்பு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சண்முகவேல் மகன். இவர் ஆரம்பக் கல்வியை ராமநாதபுரம் மற்றும் சந்திரகுடி அருகே மென்னந்தி கிராமத்திலும் நடுநிலை கல்வியை சந்திரக்குடி அருகே மென்னந்தி கிராமத்திலும் நடுநிலைக் கல்வியை மாவிலா தோப்பிலும் உயர்க்கல்வி மற்றும் மேல்நிலைக்கல்வியை ராமநாதபுரம் செய்யது அம்மாள் பள்ளியிலும் முடித்துள்ளார்.

ALSO READ:  செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தொடர்ந்து பி.எஸ்.சி (விவசாயம்) கல்வியை கோவை வேளாண் கல்லூரியிலும் முதுகலை விவசாயத்தை தில்லி பல்கலைக் கழகத்திலும் முடித்துள்ளார். பின்னர் 2012ஆம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் இந்திய அளவில் 5வது இடத்தை பிடித்து வெற்றிபெற்றார்.

Related articles

Recent articles

spot_img