கருணாநிதி 96: ஊழலின் தந்தை; பிறந்த நாள் வாழ்த்து… போட்டி போடும் டிவிட்டர் டிரெண்டிங்!

அடடே... அப்படியா? சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்

karunanidhi samadhi1 - 2026

இன்று திமுக.,வுக்கு தலைவர் ஆகிக் கொண்ட மு.கருணாநிதியின் 96 வது பிறந்த நாள் இதை முன்னிட்டு பலரும் நிகழ்ச்சிகள் பல நடத்திக் கொண்டிருக்க, டிவிட்டர் பதிவுகளிலோ சண்டை களை கட்டுகிறது.

மு.கருணாநிதி மறைந்த பின்னர் கொண்டாடப் படும் முதல் பிறந்த நாள் என்பதால், திமுக,வினர் ஆர்வத்துடன் கொண்டாடி வருகிறார்கள். அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி, அண்ணா அறிவாலயத்தில் உள்ள சிலைக்கும், உருவப் படத்துக்கும் மலர் தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் பலம் வாய்ந்த திமுக.,வின் ஐ.டி. குழு #HBDKalaignar96 M Karunanidhi #கலைஞர் என சில தலைப்புகளில் வாழ்த்து பதிவிட்டு, அதனை டிவிட்டர் ட்ரெண்டிங் தலைப்புகளாக பரப்பி விட்டு வருகின்றனர்.

அதே நேரம், திமுக., எதிர்ப்பாளர்கள் #HBDFatherOfCorruption #திருட்டுப்பயகருணாநிதி என கருணாநிதிக்கு எதிரான தலைப்புகளில் ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர். சர்க்காரியா ஊழல் தொடங்கி, விஞ்ஞான ஊழல்கள் பல செய்து, மாபெரும் அளவில் ஊழல்கள் செய்து, தமிழகத்தின் பெயரை அவப்பெயராக்கி தமிழ்நாடை ஊழல் நாடு என்று பெயர் பெற வைத்தவர் கருணாநிதி என்று இந்த டிவிட்டர் பதிவுகளில் கருத்து இட்டு வருகின்றனர்.

இந்த டிவிட்டர் ட்ரெண்ட் போட்டியில், #HBDFatherOfCorruption என்பதே முதலிடத்தில் உள்ளது. அதே நேரம் #HBDKalaignar96 அடுத்த இடத்தில் உள்ளது. இந்த இரண்டையும் ட்ரெண்ட் ஆக்கி, எது முதலிடத்தில் வரும் என்று சமூக வலைத்தலங்களில் விவாதமும் களை கட்டியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.