சிலிண்டர் வெடித்து விபத்து; வேலூரில் பிரியாணி கடை முற்றிலும் நாசம்!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை லைஃப் ஸ்டைல்

ambur fireaccident - 2026

வேலூர்: வேலூரில் பிரியாணி கடையில் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இதில், அதிர்ஷ்டவசமாக வேலையாட்கள் உயிர் தப்பினர். வேலூரில் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர் மாவட்டம் வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் ஓம் சக்தி அம்மா பிரியாணி கடை செயல்பட்டு வருகிறது! இன்று காலை பிரியாணி தயாரிக்க வேலையாட்கள் மற்றும் ஊழியர்கள் பணியைத் தொடங்கிய போது திடீரென கடையின் உள்ளே இருந்த சிலிண்டர் வெடித்தது பதறிப்போன ஊழியர்கள் உடனடியாக வெளியேறினர்

vellore briyanishop - 2026

பின்னர் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்

பிரியாணி கடைக்குள் இருந்து அத்தனை பொருட்களும் எரிந்து நாசம் அடைந்தன.  கடைக்குள் செல்ல முடியாத நிலையில் பிரியாணி கடை மாடியில் இருந்ததால் தீயணைப்பு வீரர்களுக்கு ஒரு சவாலாகவே இருந்தது

பின்னர்  வேலூர் வடக்கு காவல் நிலைய போலீசார் தீயணைப்பு குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்!

சிலிண்டர் வெடித்தவுடன் கடையில் இருந்த ஊழியர்கள் அனைவரும் தப்பியதால் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.