சென்னை இங்கே… ஏரிகள் எங்கே? ஆறுகள் இங்கே… மணல் எங்கே?

சற்றுமுன் தமிழகம் புகார் பெட்டி லைஃப் ஸ்டைல்

water lorry dmk stalin1 - 2026

குடம் இங்கே… தண்ணீர் எங்கே என்று திமுக., தலைவர் மு.க.ஸ்டாலின் முழக்கம் ஒன்றை எழுப்பியிருக்கிறார். அதற்கு பதிலடியாக, சென்னை இங்கே ஏரிகள் எங்கே ? என்று மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

குடம் இங்கே… தண்ணீர் எங்கே? லாரி அங்கே… தண்ணீர் எங்கே? என்ற குரல்களும் ஒலிக்கத் தொடங்கி உள்ளன. குறிப்பாக, மணல் லாரிகளை முன்னிறுத்தியும், தண்ணீர் லாரிகளை முன்னிறுத்தியும் சமூக வலைத்தளங்களில் கேள்விகள் பகிரப் பட்டு வருகின்றன.

water lorry dmk stalin - 2026

இந்த இலவச அவலம் எப்போது நீங்கும் என்று தோன்றும் அளவுக்கு, குடிநீர் பஞ்சத்துக்குக் காரணமான திமுக., மக்கள் பரிதவிக்கும் இந்தச் சூழலை வைத்தும்  அரசியல் செய்து வருகிறது.

 

குடி நீர் பிரச்சினைக்காக தமிழக அரசை கண்டித்து மாதவரத்தில் திமுகவினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் மேடை விளம்பர பேனர் ஆகியவை சரிந்து பெண்கள் பலர் நேற்று காயமடைந்தனர். மாதவரம் மண்டல அலுவலகம் அருகே குடிநீர் பிரச்னை தொடர்பாக தமிழக அரசை கண்டித்து சென்னை வடக்கு மாவட்டம் மற்றும் வடக்கு தெற்கு திமுக சார்பில் நேற்று காலை 10 மணி அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது!

மாவட்ட செயலர் எஸ் பி சுதர்சன் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் மாதவரம் சுற்று வட்டாரங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர் ஆர்ப்பாட்டம் முடிந்ததும், பெண்களுக்கு காலியிடங்களை கொடுப்பதற்காக ஆர்ப்பாட்டம் நடந்த இடத்தில் இருந்து எம்எல்ஏ சுதர்சனம் வீடு வரை இரண்டு முறை அலைய விட்டனர்!

இறுதியில் ஆர்ப்பாட்டம் நடத்த மேடை அருகே காலி இடங்களை ஏற்றி வந்த மினி லாரியை நிறுத்தி குடங்களை வழங்கினர்! அப்போது குடங்களை பெறுவதற்காக கூட்டம் முண்டியடித்தது. அங்கு ஏற்பட்ட நெரிசலால் சில தடுமாறி பெண்கள் கீழே விழுந்தனர். குடம் வழங்குவது நிறுத்தப்பட்டது. மீண்டும் சில நிமிடங்களுக்கு பின் ஆர்பாட்ட மேடையில் வைத்து குடங்கள் வழங்கப்பட்டன!

அப்போது ஏற்பட்ட நெரிசல் காரணமாக மேடை மற்றும் விளம்பர பேனர் சரிந்து 20க்கும் மேற்பட்ட பெண்கள் கீழே விழுந்தனர். காயமடைந்தவர்கள் அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்!

தண்ணீருக்காக அலைந்த மக்களை திமுகவினர் காலி குடங்களுக்கு அலைய விட்டு அதில் சில பெண்களை காயமடைய வைத்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது!

இதே போல், போராட்டம் என்ற பெயரில் திமுக.,வினர் காலி குடங்களை வைத்து அரசியலை அரங்கேற்றி வருகின்றனர். அதே நேரம், சென்னை மக்களுக்கு தண்ணீர் கிடைக்காமல் பார்த்துக் கொள்கின்றனர். திமுக.,வினரின் அரசியல் நாடகம் தோல்வி அடைய வேண்டுமென்றால், மழை கொட்டித் தீர்த்தால்தான் ஒரே வழி என்று பொதுமக்கள் புலம்பும் நிலைக்கு வந்திருக்கிறது திமுக.,!

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.